மனிதன் ஆதிகாலம் தொட்டு வளர்த்து வரும் ஒரு விலங்காக பசுமாடு இருக்கிறது. தாய்ப்பாலுக்கு பதிலாக பசும்பாலை நமது குழந்தைகள் பருக தரும் பசுவை நாம் கோமாதா என அழைக்கிறோம். பசு ஒரு இறையம்சம் கொண்ட ஒரு விலங்காகும். ஜாதகத்தில் கிரக தோஷம் கொண்டவர்கள் பொருளாதார ரீதியாகவும், இல்லற வாழ்விலும் பல சங்கடங்களை அனுபவிப்பார்கள். அவற்றையெல்லாம் போக்கக்கூடிய ஒரு ஸ்லோகமாக இந்த “கோமாதா ஸ்லோகம்” இருக்கிறது.
கோமாதா ஸ்லோகம்
ஸெளர பேய்ய ஸர்வ ஹிதா
பவித்ரா புண்யராஸய
ப்ரதிக்ருண்ணம்த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரைலோக்ய மாதர
தேவர்கள் வசிக்கும் புனிதமான கோமாதா எனப்படும் பசுவை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் உங்கள் வீட்டு பசுமாட்டையோ அல்லது கோயில் மாடத்தில் வளர்க்கப்படும் பசுமாட்டையோ இம்மந்திரத்தை 3 முறை துதித்த வாரே வலம் வந்த பின்பு அப்பசுமாட்டிற்கு அகத்தி கீரையையோ, வாழைப்பழத்தையோ கொடுத்து வழிபடுவதால் உங்களுக்கு கோசாபம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அது நீங்கும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகி வீட்டில் செல்வங்கள் பெருகும். காரிய தடைகள் நீங்கும். அனைத்திலும் வெற்றி கிட்டும்.
காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே, எல்லோருக்கும் நன்மை அருள்பவளே, தூய்மையானவளே புண்ணிய வடிவானவளே! மூவுலகத்திற்கும் தாயாகத் திகழ்பவளே இந்தப் புல்லைப் பெற்றுக் கொள்வாயாக என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும். பழங்காலம் முதலே நமது நாட்டில் பசுக்கள் தெய்வத்தன்மை வாய்ந்த ஒரு விலங்காக கருதப்பட்டு வணங்கப்படுகின்றன. ரிஷிகளின் கருத்துபடி பசுவின் உடலில் பல லட்சக்கணக்கான தேவர்கள் வசிப்பதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட புனிதமான கோமாதாவை வணங்கும் போது இம்மந்திரத்தை துதித்து வணங்குவதால் நன்மைகள் பல உண்டாகும்.