மந்திரம்:
“ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே”
“ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
ஸர்வாபாதா விநிர்முக்தோ தனதான்ய ஸுதான்விதஹ
மனுஷ்யோ மத்ப்ரஸாதேன பவிஷ்யதி நஸம்சயஹ”
துர்கையம்மனுக்குரிய இம்மந்திரத்தை, செவ்வாய்கிழமைகளன்று மாலை நேரத்தில் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, அங்குள்ள துர்க்கை அம்மன் சந்நிதியில் எலுமிச்சைபழத்தை இருபாதியாக வெட்டி, அதிலுள்ளவற்றை கடைந்தெடுத்து அதில் சுத்தமான பசுநெய்யை ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி இம்மந்திரத்தை 108 முறை உரு ஜெபிக்க வேண்டும். இப்படி செய்து வர எந்த ஒரு காரியத்திலும் உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த தடைகள் நீங்கும். உங்களிடம் மற்றும் நீங்கள் வசிக்கும் இடத்திலிருக்கும் தீய சக்திகள் நீங்கும். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த உங்கள் எதிரிகள் அடங்கிப்போவார்கள்.