மந்திரம்:
நீலாஞ்சன ஸமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்ரம் ||
பொதுவான பொருள்:
“நீல நிற மலையைப் போல் தோற்றம் கொண்ட சனி பகவானே, சூரியனின் புத்திரனும் எமதர்மனின் சகோதரனுமானவனே, “சாயா” “மார்த்தாண்ட” என்கிற சூரியபகவானின் மைந்தனே, மிக மெதுவாக சுழல்பவனே, உனக்கு என் பணிவான வணக்கங்கள்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.
இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் சனி நீராடிய பிறகு, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கும் அந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக இருக்கும் மரத்திற்கும் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் காக்கைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். இதனால் சனி பகவான் மனம் குளிர்ந்து உங்களுக்கு அவரின் தசை காலங்களில் ஏற்படும் கஷ்டங்களின் கடுமை தன்மையை குறைப்பார்.