ஆதிஷேசன் காயத்ரி மந்திரம்

இந்து மதம் மற்றும் இதர கிழக்காசிய மதங்களில் பாம்பு ஒரு தெய்வீக விலங்காக கருதப்படுகிறது. தேவர்கள்,மனிதர்கள் பிற உயிர்கள் என அனைத்தையும் காக்கும் கடவுளாக இருப்பவர் பெருமாளாகிய மகாவிஷ்ணு. வைகுண்டத்தில் பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு படுக்கையாக இருப்பவர் ஐந்து தலை பாம்பாக இருக்கும் ஆதிசேஷன் ஆவார். அவரை வழிபடுவதற்குரிய “ஆதிஷேசன் காயத்ரி மந்திரம்” இதோ

adhiseshan

ஆதிஷேசன் காயத்ரி மந்திரம்

ஓம் ஸஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தன்னோ ஆதிசேஷ ப்ரசோதயாத்

பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளின் படுக்கையாக சேவை சாதிக்கும் ஸ்ரீ ஆதிசேஷனை போற்றும் காயத்ரி மந்திரம் இது. சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் துதிப்பதால் ஒருவருக்கு ஆதிசேஷன் மற்றும் பெருமாளின் ஆசிகள் கிடைக்கும். மேலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும் பெருமாள் கோயிலுக்கு சென்று இம்மந்திரம் துதித்து ஆதிசேஷனையும், பெருமாளையும் வழிபடுவதால் ராகு – கேது கிரகங்களின் கிரக தோஷங்கள், நாக தோஷங்கள் நீங்கும். பாம்பு போன்ற விஷ ஜந்துக்களினால் ஆபத்து ஏற்படாமல் காக்கும்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. இறைவனின் படைப்பில் ஒரு அற்புதமான படைப்பு பாம்பாகும். சாமானிய மக்களுக்கு பாம்பு ஒரு விஷ ஐந்து. ஆனால் யோகிகளுக்கும், ஞானிகளுக்கும் ஞானம் எனப்படும் உயரிய பேறு மனிதனுக்கு கிடைக்க செய்யும் குண்டலினி யோக சக்தியை குறிப்பதாக பாம்பு இருக்கிறது. எனவே தான் ருத்ரனாகிய சிவனும், காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவும் பாம்பை தங்களுடன் எப்போதும் இருக்குமாறு செய்தனர். அதில் பெருமாளின் சேவனாகிய ஆதிசேஷனின் இம்மந்திரம் துதிப்போருக்கு அவரின் அருள் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published.