இந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.

வேண்டிய வரங்களை வேண்டிய மார்க்கத்தில் பக்தர்களுக்கு தரக் கூடிய சக்தி இந்த வாராஹி அம்மனுக்கு உண்டு. நிறைய பேர் வாராஹி அம்மனை கண்டு பயப்படுவார்கள். பயம் தேவையில்லை. உண்மையான பக்தி இருந்தாலே போதும். சுலபமான வழிபாட்டை செய்து இவரிடமிருந்து வரங்களை அள்ளிச் சென்று விடலாம். வாராஹி அம்மனை எந்த கிழமையில், எந்த நேரத்தில், எந்த பாடல் வரிகளை உச்சரித்து வழிபாடு செய்தால் வேண்டிய வரத்தினை 9 வாரங்களிலிருந்து 21 வாரத்திற்குள் பெற முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எதிரிகளின் தொல்லை, வீட்டில் கண் திருஷ்டி பிரச்சனை, கோர்ட் கேஸ் வழக்கு நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே செல்கிறது, வீட்டில் தீராத கஷ்டம், குழந்தைகளின் வாழ்க்கை சரியான பாதையில் செல்லவில்லை, கணவனுக்கு சரியான வேலை இல்லை, ஏவல் பில்லி சூனியம் இப்படி எந்தக் கஷ்டமாக இருந்தாலும் சரி அதற்கு தீர்வு பெற இந்த பரிகாரத்தை மட்டும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

வராஹி அம்மனை வேண்டி தீராத கஷ்டம் தீர, வேண்டிய வரம் உடனே கிடைக்க சனிக்கிழமை அன்று வழிபாடு செய்யவேண்டும்.  சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் முடிந்தால் இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள், சனிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்திருக்க வேண்டும். சனிக் கிழமையை தவிர்த்து வளர்பிறை பஞ்சமி அன்று இந்த பரிகாரத்தை செய்வது மேலும் சிறப்பினை தேடித் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Varahi amman

பரிகாரத்திற்கு ஒரு மண் அகல்விளக்கு, கருப்பு அல்லது கரு நீல சதுரவடிவ காட்டன் துணி, வென்கடுகு, சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய், இலுப்பெண்ணை இந்த மூன்றில் உங்களால் எது முடியுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வராஹி அம்மனை வேண்டி தயாராக எடுத்து வைத்திருக்கும் கருப்பு நிற துணியில் வெண்கடுகை சிறிதளவு வைத்து, கருப்பு நிற நூலால் ஒரு சிறிய முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். தயாராக இருக்கும் அகல் விளக்கின் மீது இந்த மூட்டையை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

அவ்வளவு தான்! உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் பொசுங்கி விடும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. குறிப்பாக இந்த தீப ஒளியை பார்த்து வாராஹி அம்மன் ஆசீர்வாதத்தை பெற்று தரும் இந்த பாடலை, அம்மனின் மனதை மகிழவைக்கும், வாராஹி அம்மனுடைய இந்த பாடலை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். உங்களுக்கான வாராகி அம்மன் பாடல் இதோ!

அன்னை வடிவம்
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!

venkadugu

இந்தப் பாடலை உச்சரித்துவிட்டு உங்களுக்கு எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டுமோ, அந்த வேண்டுதலை அம்மனிடம் மனதார சொல்லி அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு கஷ்டத்திற்காக மட்டும் பரிகாரம் செய்ய வேண்டும். பலவகையான கஷ்டத்தை, வேண்டுதல்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

varahi

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் தாராளமாக வாராகி அம்மன் புகைப்படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். இஷ்டம் இல்லாதவர்கள் மனதார வாராஹியை நினைத்து இந்த பரிகாரத்தை, உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்தாலும் நல்ல பலனை பெற முடியும். தொடர்ந்து 9 வாரங்கள் இந்த வழிபாட்டை வீட்டில் செய்து வாருங்கள். முடிந்தவர்கள் 21 வாரங்கள் வரை செய்தாலும் தவறில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.