இறைவனை வழிபடுபவர்கள் அனைத்தையும் கிடைக்க பெறுவார்கள் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. ஆனால் இறைவனை நாம் வணங்கும் போது மந்திரங்கள் கொண்டு துதித்து, நமது கோரிக்கைகள், விருப்பங்களை சமர்ப்பிக்கும் போது அனைத்தும் விரைவில் நிறைவேறும். நமது புராணங்களில் கூறப்படும் தேவர்கள் எனப்படும் விண்ணுலகினரும் இறைவனின் தன்மை கொண்டவர்கள் தான். அதில் விண்ணுலக தலைவனான இந்திரனின் பத்தினியான “இந்திராணி காயத்ரி மந்திரம்” துதிப்பதால் பெறும் பலன்கள் என்ன என்பதை இங்கு காணலாம்.
இந்திராணி காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ராணி ப்ரசோதயாத்
விண்ணுலகை ஆளும் இந்திரனின் பத்தினியான இந்திராணியின் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் 108 முறை துதித்து வருபவர்களுக்கு நன்மைகள் பல உண்டாகும். வெள்ளக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு விளக்கேற்றி இந்திராணியின் இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை துதிப்பவர்களுக்கு ஆண் – பெண் வசியம் உண்டாகும். இல்லற வாழ்வில் இருக்கும் தம்பதிகளிடையே
பிரியம் அதிகரிக்கும். அனைத்து வகையான சுக போகங்களையும் அனுபவிக்கும் அமைப்பு ஏற்படும். செல்வ வளம் பெருகும்.
தேவர்கள் என்பவர்கள் மனிதர்களுக்கும் கடவுளர்களுக்கும் இடைப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் வசிக்கும் உலகம் தேவலோகம் எனப்படும். இந்த லோகத்தில் வசிக்கும் தேவர்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பவர் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்ட இத்திறன் ஆவார். அவரின் பத்தினி தான் இந்திராணி. மகாலட்சுமியின் அம்சம் கொண்ட இந்திராணியின் இந்த மந்திரத்தை கூறி துதிப்பதால் நாம் பல நன்மைகளை பெற முடியும்.