இந்த இடத்தில் அமர்ந்து, மந்திரத்தை உச்சரித்தால், 15 நாட்களில் பலனை அடைந்து விட முடியும். அது எந்த இடம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பொதுவாகவே, மனிதர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வழிபாட்டு முறை என்றால், அது நமக்காக, நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கும் மந்திரங்கள் தான். அந்த மந்திரங்களை மனதார உச்சரிக்கும் பொழுது, நம்முடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும். நிறைய பேருக்கு இதில் அனுபவமும் இருக்கும். சில பேருக்கு மந்திரங்கள் உடனே பலன் தராது. சிலபேர், மந்திரங்களை பாராயணம் செய்த சில தினங்களிலேயே, பலனை அடைந்து விடுவார்கள். அது அவரவருடைய நம்பிக்கையையும், மன உறுதியையும் பொருத்தது.

om manthiram

உங்களுடைய பலவகையான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை தரும், சில ஒருவரி மந்திரங்களையும் அந்த மந்திரத்தை எந்த இடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் பட்சத்தில், குறைந்தது 15 நாட்களில் பலனை அடைய முடியும் என்ற ஒரு சூட்சுமத்தையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மந்திரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் குறிப்பிட்ட எந்த பிரச்சனைக்கு, எந்த மந்திரம் என்று தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

மன அமைதியான வாழ்க்கை தேவை என்றால், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை 108 முறை, 15 நாட்கள் உச்சரித்து வரவேண்டும். விரைவில் கடன் தீர ‘ஓம் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை, 15 நாட்கள் உச்சரிக்க வேண்டும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ‘ஓம் வித்யாசரஸ்வதியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

shivan

மன பயம் நீங்க ‘ஓம் நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வாருங்கள். நம்முடைய குடும்பம் ஒற்றுமையாக, சந்தோஷமாக, வளமாக இருக்க ‘ஓம் உமாமஹேஸ்வராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். வண்டி, வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேர்வதற்கு ‘ஓம் வர லட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

 

தீராத துன்பங்கள் தீர்வதற்கும், உடலில் இருக்கும் பிணி நீங்குவதற்கும், ‘ஓம் ஆஞ்சநேயாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ஆனால் இந்த மந்திரங்களை எந்த இடத்தில் அமர்ந்து, உச்சரித்தால் 15 நாட்களில் பலனை அடையலாம்?

hanuman-sivan

உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கும் பசு மாட்டு தொழுவத்திற்கு அருகில், இருக்கக்கூடிய இடத்தில் கிழக்குப் பக்கம் அமர்ந்து, 15 நாட்கள், 108 முறை, பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு, காலை 6 மணிக்கு முன்பு, உச்சரித்தால் இந்த மந்திரத்திற்கான பலனை உங்களால் முழுமையாக பெற முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை. எல்லோராலும் பசு மாட்டு தொழுவத்திற்கு சென்று, 15 நாட்கள் உச்சரிக்க முடியுமா என்ற சந்தேகம் எழும்.

pasu

கிராமப்புறங்களில் உள்ளவர்கள் அக்கம்பக்கம் இருக்கும் நான்கு பசு மாடுகளை கட்டி வைக்கும், கொட்டகைக்கு சென்று கூட அதன் அருகில் ஏதாவது இடம் இருந்தால், அங்கு அமர்ந்து ஒரு 15 நாட்கள் இப்படி செய்து வரலாம். கொஞ்சம் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் கோமாதா படத்திற்கு முன்பாக அமர்ந்து, இந்த மந்திரத்தை, 15 நாட்கள், 108 முறை நம்பிக்கையோடு உச்சரித்து வாருங்கள். மேல் குறிப்பிட்டுள்ள மந்திரங்கள் மட்டுமல்லாமல், உங்களுடைய குறிக்கோளுக்கு வழிவகுக்கும் எந்த மந்திரத்தையும் பசு மாட்டுத்தொழுவத்தின் அருகில் அமர்ந்து உச்சரித்தால், 15 நாட்களில் பலனை அடைய முடியும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.