இந்த ஒரு மந்திரத்தை தினமும் ஜெபித்து வந்தால் போதும், உங்கள் ஜென்ம எதிரிகள் கூட உங்களிடம் வந்து தஞ்சம் அடைவார்கள்.


[og_img]

நன்மையும் தீமையும் கலந்தது தான் வாழ்க்கை. இன்றைய காலகட்டத்தில் நண்பனும் எதிரியும் நம் அருகிலேயே தான் இருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் ஒருவன் தன்னுடைய எதிரி யார் என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இப்படி கூறுவதால் எதிரியை அழிக்க தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை நமக்கு நன்மை செய்பவர்கள் யார்,தீமை செய்பவர்கள் யார் என்ற புரிதல் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நம் எதிரியை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறுவதற்கான பொருள். சரி நாம் அவர்களை பற்றி கருத்தில் கொள்ளாமல் நம் பணிகளை செவ்வனே செய்து கொண்டு செல்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் நமக்கு எதிரியானவர்கள் நம்மை அப்படி பாவிக்கிறார்களா நிச்சயமாக மாட்டார்கள் அவர்கள் நமக்கு கெடுதல் செய்வதால் தானே நமக்கு எதிரிகளாகவே இருக்கிறார்கள். அவர்களிடம் சரிக்கு சமமாக நாமும் எதுவும் செய்யாமல் இந்த ஒரு மந்திரத்தை கூறி இந்த தெய்வத்தை சரணடைந்தாலே போதும். அந்த தெய்வம் வேறு யாரும் இல்லை அது கந்த கடவுள் தான். அந்த மந்திரம் பகை கடிதல். இதை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

மற்ற தெய்வங்கள் எல்லாம் இருக்கும் போது இவரை மட்டும் எதற்கு நாம் சரணடைய வேண்டும். இவர் மட்டும் தான் எதிரிகளை நம்மை நெருங்க விடாமல் காப்பாற்றுவரா, மற்ற தெய்வங்கள் காக்க மாட்டார்களா என்றால் அனைத்து தெய்வங்களும் காக்க தான் செய்வார்கள் இதில் சந்தேகம் இல்லை. ஆனால் சில தெய்வங்கள் சில விஷயங்களுக்கு முதற் கடவுளாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த கந்த பெருமான் எதிரிகளை இல்லாமலே செய்து விடும் சூரசம்ஹார மூர்த்தியாக விளங்குபவர். அதனால் தான் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட இவரை அணுக வேண்டும் என்று கூறுவதற்கான காரணம்.

செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உரிய நாள் ஆதலால் அந்த நாளில் இந்த மந்திரத்தை படிக்க தொடங்குவது சிறப்பு.முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை இந்த மந்திரத்தை படிக்க தொடங்குவது நல்லது. செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து நாம் மனத்தையும் உடலையும் தூய்மையாக வைத்து முருகப்பெருமான் முன் அமர்ந்து விளக்கேற்றி பூவை சாற்றி விட்ட பிறகு ஏதாவது ஒரு சிறு தெய்வேந்தியம் வைத்து அது ஒரே ஒரு பேரிச்சை பழமாக கூட இருக்கலாம். ஏதோ உங்களால் இயன்ற ஒரு நெய்வேத்தியத்தை இறைவனுக்கு படைத்து விட்டு நீங்கள் இந்த மந்திரத்தை படித்த தொடங்கலாம்.

மந்திரத்தை தொடங்கும் போது அந்த எதிரி உங்களுக்கு கண்ணுக்குத் தெரிந்தவராகவும் இருக்கலாம், தெரியாதவராகவும் இருக்கலாம் ஆனால் இந்த துன்பத்திற்கு நான் ஆளாகியுள்ளேன் அந்த துன்பத்திலிருந்து நீங்கள் தான் என்னை காக்க வேண்டும் இவ்வளவு மட்டுமே நீங்கள் அவரிடம் கூறினால் போதும். அந்த துன்பத்திற்கு காரணமானவர்களை உங்களிடம் வந்து சரணடையும்படி செய்யக்கூடிய வல்லமை பொருந்திய மாபெரும் கடவுள் இந்த முருகப்பெருமான்.

இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய செவ்வாய்க்கிழமை தொடங்குவது போல் முருகப்பெருமானுக்கு உகந்த பரணி நட்சத்திரமன்றோ, கார்த்திகை நட்சத்திரம் , சஷ்டி இது போன்ற விசேஷ நாட்களில் தொடங்கினாலும் நல்லது.

நீங்கள் மிகப்பெரிய தொல்லையில் இருக்கிறீர்கள் இதை உடனே நான் செய்தாக வேண்டும் என்று நினைத்தீர்களானால், நினைத்த அன்றே இதை தொடங்கி விடலாம். இதனால் தவறு ஒன்றும் இல்லை. உங்கள் பிரச்சனைகளை உடனே அவர் தீர்த்து உங்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுப்பார்.

பகை கடித்தல் மந்திரம்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினைஎனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. [1]

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல்பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன்இறைவனையே. [2]

இதரர்கள் பலர்பொரவே இவணுறைஎனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. [3]

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. [4]

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினைஎனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. [5]

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. [6]

எளிய என் இறைவ குகா எனநினைஎனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையெனமிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. [7]

இலகயில் மயில்முருகா எனநினைஎனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. [8]

Lord Murugan Vel

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. [9]

கருணைபெய் கனமுகிலே கடமுனிபணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினைஎனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

Leave a Reply

Your email address will not be published.