இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும்! வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நிறைய இழப்புகளை சந்தித்து உள்ளீர்களா! நீங்கள் சம்பாதித்த பணம், சொத்து, நகை இப்படி எல்லாவற்றையும் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வருபவர்களாக இருந்தால், இழந்த சொத்துக்களை, இழந்த நகைகளை, இழந்த அந்தஸ்தை மீட்டெடுக்க ஆன்மீக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நகை பணம் சொத்தை இழந்தவர்களுக்கு மட்டுமல்ல, தங்களுடைய வாழ்க்கையை இழந்தவர்கள், தங்களுடைய வாழ்க்கையை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டு இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

karthaveeryarjunar

அதாவது, ஏதோ ஒரு தருணத்தில் தங்களுடைய குடும்ப உறவினர்களை எல்லாம் கூட சிலபேர் இழந்துவிட்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்பாராத சண்டை சச்சரவு வந்திருக்கும். அந்த நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை பிரிந்திருக்கலாம். குழந்தைகள் பெற்றவர்களைப் பிரிந்து இருக்கலாம். கணவன், மனைவியை பிரிந்து இருக்கலாம். இப்படிப்பட்ட உறவுகளின் இழப்புகளை கூட மீட்டுத் தரக் கூடிய சக்தி இந்த ஒரு மந்திரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

கருப்பண்ணசாமி, வீரபத்திரர், முனீஸ்வரர், இந்த உக்கிரமான தெய்வங்களின் வரிசையில் ஆயிரம் கைகளை கொண்டு, பக்தர்களை காக்க கூடியவர் கார்த்த வீர்யார்ஜுனர். உக்கிரமான தெய்வங்களை பயபக்தியோடு, ஆத்மார்த்தமாக வழிபாடு செய்பவர்களுக்கு உடனடியாக கைமேல் பலன் உண்டு என்பது ஐதீகம்.

praying-god1

நீங்களும் தினமும் காலையில் எழுந்து, சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு கார்த்த வீர்யார்ஜுன என்று இவரின் பெயரை உச்சரித்து, பின் வரக்கூடிய மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் சுலபமாக மீட்டெடுத்து விடலாம். அதற்கான வழியை நிச்சயம் உங்களுக்கு இந்த கார்த்த வீர்யார்ஜுன சுவாமி காட்டுவார் என்பதில் துளி அளவும் சந்தேகம் கிடையாது. உங்களுக்கான கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம் இதோ!

கார்த்த வீர்யார்ஜுனன் மந்திரம்:
அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

kartha-verrarjuna1

நம்பிக்கையோடு இவரை மனதார அழைத்து வழிபடுபவர்களுக்கு இவருடைய ஆயிரம் கைகள் பாதுகாப்பு அரணாக அமையும். உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்களை, தடுக்கக்கூடிய சக்தி இவருக்கு உண்டு. இதோடு மட்டுமல்லாமல் நீங்கள் இழந்ததை கார்த்த வீர்யார்ஜுனன் தன்னுடைய கரங்களாலேயே மீட்டெடுத்து, உங்கள் கரங்களில் தரக் கூடிய சக்தியும் இந்த கடவுளுக்கு உண்டு என்று சொல்கிறது சாஸ்திரம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.