முருகன் மூல மந்திரம்:
“ஓம் ஷ்ரீம் ஹிரீம் விரீம் சௌம் சரவணபவ”
இச்சிறப்பான நன்னாளில் அதிகாலையில் துயிலெழுந்து (அப்படிக் காலையில் இயலாத பட்சத்தில் மாலைப் பொழுதில்) உடல் மற்றும் உள்ளத் தூய்மை செய்து கொண்டு வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் முருகன் கோவில் சந்நிதியிலோ அல்லது அத்தகைய முருகனின் படத்திற்கு முன்போ நின்று விளக்கேற்றி பால், பழம் நிவேதனம் வைத்து இம்மூலமந்திரத்தைக் 27 முறைக் கூற வேண்டும். இது மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் ஆகும். இதை திடசித்ததுடன் உரு ஜெபிக்கப்படும் போது நிச்சயமான பலன்களைக் கொடுக்கும். ஒரு மண்டலம் அல்லது 48 நாள் இதைத் தொடர்ந்து ஜபித்து வருபவர்களுக்கு நினைத்த நல்லவை யாவும் அந்த முருகனின் அருளாள் நிச்சயம் நிறைவேறும்.