உங்களிடம் பிறர் கொண்டிருக்கும் பகைமை தீர இம்மந்திரம் துதியுங்கள்

ஆணவம், கன்மம், மாயை ஆகிய இந்த மூன்று குணங்களும் பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கின்றன. இந்த குணங்கள் இருக்கும் காரணத்தினால் தான் ஒருவர் மற்றவருடன் இணக்கமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேற்கூறிய மூன்று குணங்களையும் பொசுக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். அத்தகைய சிவபெருமான் உலகெங்கிலும் லிங்க வடிவில் லிங்கோத்பவர் எனும் பெயர் கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அந்த லிங்கோத்பவர் மந்திரம் துதிப்பதால் ஏற்படும் மேலும் பல நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

லிங்கோத்பவர் மந்திரம்

பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்

ஜன்மஜது க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

இந்த லிங்கோத்பவர் மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பது மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். திங்கட்கிழமைகள், மாத சிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி ஆகிய தினங்களில் சிவபூஜையின் போது, சிவலிங்கத்திற்கோ அல்லது சிவபெருமான் படத்திற்கோ நாகலிங்க மலர்களைச் சமர்பித்தோ அல்லது அர்ச்சனை செய்தவாறு இம்மந்திரத்தை அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி மனஅமைதி உண்டாகும். எத்தகைய பகைவர்களையும் வெற்றி கொள்ளலாம். பிறருடன் ஏற்பட்ட சண்டைகள், கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம், பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம், அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன் என்பதே இந்த லிங்கோத்பவர் மந்திரத்தின் பொதுவான பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் துதிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published.