உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். அப்படி எண்ணற்ற சித்தர்கள், ரிஷிகள், ஞானிகள், மகான்கள் தோன்றிய இந்த புனித பாரதத்தில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். அவரை வழிபடுவதற்குரிய “ஸ்ரீ ராகவேந்திர ஸ்லோகம்” இதோ.
ராகவேந்திரர் ஸ்லோகம்
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே
மந்திராலயத்தில் ஜீவ சமதையடைந்த மகாஞானியான ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய ஸ்லோகம் இது. இந்த மந்திரத்தை வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். வியாழக்கிழமைகளில் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, ராகவேந்திரரை மனதில் நினைத்து இந்த ஸ்லோகத்தை 108 முறை உரு ஜெபிக்க உங்களுக்கு ஏற்படும் எத்தகைய கஷ்டங்களையும் விரைவில் நீக்கி அருள்புரிவார் மகான் ஸ்ரீ ராகவேந்திரர்.
ஆன்மீக பூமியான தமிழ் நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் வழிபாட்டை மக்கள் அனைவரிடமும் பரப்பும் புண்ணிய பணியை மேற்கொண்டார். மகானாகிய ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை சோதிக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் அகங்காரத்தை அடக்கி ஞானத்தை அருளினார். தன்னை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.