உங்களின் தொழில், வியாபார பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி என்கிற பாடல் வரிக்கேற்ப தமிழர்களின் ஆதர்ச தெய்வமாக இருப்பவர் சிவபெருமான். நமக்கு புறத்திலும், அகத்திலும் ஏற்படும் எப்படிப்பட்ட மாசுகளும் சிவனின் பெயர்களை உச்சரித்தாலே அது நீங்கும். அந்த சிவபெருமான் தேவர்களையும், உலகில் வாழும் உயிர்களையும் காக்க தனது யோகசக்தியின் அம்சமாக தோற்றுவிக்கப்பட்ட தெய்வம் பைரவ மூர்த்தி. இதில் கபால பைரவருக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

கபால பைரவர் காயத்ரி மந்திரம்

ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோஹ் கபால பைரவ ப்ரசோதயாத்

சிவபெருமானின் ரூபமாக, தீய சக்திகளை அழிப்பதற்காக 64 பைரவர்களில் ஸ்ரீ கபால பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை வேளைகளில் 108 முறை துதித்து செல்வது சிறப்பு. சனிக்கிழமைகள்,தேய்பிறை அஷ்டமி போன்ற தினங்களில் பைரவர் சந்நிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பவர்களுக்கு பீடைகள் ஒழியும். ஜாதகத்தில் சந்திர மகாதிசை நடப்பவர்களுக்கு சந்திரனால் பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாது. உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்துகள் நீங்கும். எதிரிகள் பயம், தொல்லைகள், வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

அனைத்திலும் இருக்கும் தீயவற்றை அழித்து இந்த உலகம் மற்றும் மறு உலகத்தின் சமநிலையை கட்டி காப்பவர் எல்லாம் வல்லவராகிய சிவ பெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து உதித்தவர் தான் காக்கும் கடவுளாகிய “பைரவர்”. சிவபெருமானிடமிருந்து 64 வகையான பைரவர்கள் தோன்றினார்கள். சிவபெருமானின் அம்சமாக தோன்றியதால், பைரவ மூர்த்தி தன்னை வழிபடும் மக்களின் தீவினைகளை போக்கி, நன்மையான பலன்களை அளிக்கிறார். அவரின் இந்த மந்திரத்தை துதித்து வணங்குவதால் நன்மைகள் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published.