உங்களின் மனக்கவலை மற்றும் துன்பங்கள் தீர இம்மந்திரத்தை துதியுங்கள்

குழந்தை, ஞானி ஆகிய இருவரும் மனமற்றவர்கள். ஆதலால் அவர்களின் மனதில் இன்பம் மட்டுமே எப்போதும் நிறைந்திருக்கிறது. ஆனால் பெருமபான்மையான சாமானிய நிலையிலிருக்கும் மக்களாகிய நமக்கு அந்த இருவரை போன்ற கொடுப்பினை இல்லை. விவரம் அறிந்த நாள் முதல் வாழ்வின் இறுதி வரை எண்ணற்ற மனக்கவலைகள், துன்பங்கள், போராட்டங்கள் என்று தினமும் ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ்கிறோம். அப்படி கஷ்டப்படுகிறவர்களுக்கான “சிவ மந்திரம்” தான் இது.

சிவ மந்திரம்

ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே
ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ

மகாதேவராகிய சிவபெருமானை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம் மாலை என உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் துதித்து வருவது நல்லது. திங்கள்கிழமைகள், மாத சிவராத்திரி பிரதோஷ தினங்களில் வீட்டில் நமது கைவிரல் அளவிற்கும் குறைந்த அளவில் உள்ள சிவலிங்கத்திற்கு தும்பை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து இம்மந்திரத்தை 27முறை துதித்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து மனக்கவலைகள் மற்றும் துன்பங்களும் சிவனின் அருளால் நீங்கும்.

கயிலாய மலையில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் சிவபெருமான் தனது ஆற்றலால் உலகில் அனைத்திற்கும் காரகனாக இருக்கிறார். வழிபடும் பக்தர்களின் பக்திக்கு எளிதில் வரமளிக்கும் கருணாமூர்த்தியாக இருப்பவர் சிவன். அவரை வழிபடுபவர்களுக்கு மரணம் குறித்த பயம் இல்லாது போகிறது. தீமைகள் அனைத்தும் சிவனை நினைத்தாலும் அவரின் நாமத்தை ஜெபித்தாலும் முற்றிலும் விலகும். அந்த சிவபெருமானுக்குரிய இந்த மந்திரத்தை துதிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட துக்கங்களும், மனக்கவலைகளும் முற்றிலும் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published.