உங்களின் வீண் மனக்கவலைகள் நீங்க, வெளிநாடு செல்ல இதை துதியுங்கள்

மனம் என்கின்ற ஒன்று மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. நமது உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக இந்த மனமே இருக்கிறது. மனதில் கவலைகள், கோபங்கள், பயங்கள் போன்ற உணர்வுகள் இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. மனம் ஒருவருக்கு நல்ல நிலையில் இருக்க நவகிரகங்களில் சந்திர பகவானின் அருள் ஆற்றல் வேண்டும். அவருடைய இந்த சந்திர பகவான் துதியை படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சந்திர பகவான் துதி

கதாயுததரம் தேவம் ஸ்வேதவர்ணம் நீசாகாரம்
த்யாயேத் அம்ருத ஸம்பூதம் ஸர்வகாம பலப்ரதம்

 

மனோகாரகனான சந்திரன் பகவானுக்குரிய துதி இது. இந்த துதியை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை ஜெபிப்பதால் உங்களின் வீண் மனக் கவலைகள், பயங்கள் நீங்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உங்களுக்கு ஏற்படுகின்ற நோய்கள் விரைவில் நீங்க பெறும். காரியங்களில் வெற்றி உண்டாகும்.

ஆரோக்கியமான மனிதனுக்கு அடிப்படையே அவனது மனம் தான். எனவே எந்த நிலையிலும் நமது மன நலம் குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறோம். நவகிரகங்களில் மனிதர்களின் மனநிலையை கட்டுப்படுத்தும் மனோகரகனாக சந்திர பகவான் கருதப்படுகிறார். அத்தகைய சந்திர பகவானின் அருளால் நமக்கு பல நன்மைகள் உண்டாக அவருக்குரிய இந்த துதியை உரு ஜெபித்து வழிபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.