உங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்க சுலோகம் இதோ

மனிதர்கள் அனைவரும் வசிப்பதற்கு அவர்களுக்கென்று ஒரு வீடு அவசியம். வீடு என்பது நாம் மட்டும் வசிக்க மட்டுமில்லாமல் நமது வருங்கால சந்ததிகள் சிறப்பான வாழ்க்கை வாழ வீட்டில் நன்மையான சக்திகள் அதிகம் இருக்கும் படி வீடு கட்ட உதவும் கலை தான் வாஸ்து சாஸ்திரம் கலை. அந்த கலைக்கு நாயகனாக இருக்கும் வாஸ்து பகவானின் அருளை தரும் வாஸ்து ஸ்லோகம் இதோ.

வாஸ்து ஸ்லோகம்

ஓம் வாஸ்து புருஷாய நம
ஓம் ரத்தலோசனாய நம

ஓம் க்ருஷ்யாங்காய நம
ஓம் மஹா காயாய நம

அனைவரின் வீட்டையும் ஆட்சி புரியும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்குரிய வாஸ்து ஸ்லோகம் இது. தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது. மாதத்தில் வரும் வாஸ்து தினத்தில், வாஸ்து புருஷருக்குரிய நேரத்தில் இந்த ஸ்லோகத்தை துதிப்பதால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க பெற்று நன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.

வாஸ்து சாஸ்திரம் என்பது நமது பாரத நாட்டின் மிகவும் தொன்மையான ஒரு கலையாகும். தேவலோக சிற்பியான மயன் பூமியில் வாழும் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் வகையில் இக்கலையை மனித குலத்திற்கு தந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு மனையிலும் வாஸ்து பகவான் எனப்படும் வாஸ்து புருஷன் வீற்றிருக்கிறார். அவரின் அருளை அதிகம் தரும் இந்த வாஸ்து ஸ்லோகத்தை வீட்டில் துதிப்பதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published.