உயர்ந்த பதவி உங்களை தேடி வர, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்! கட்டாயம் ராஜ வாழ்க்கை உங்களைத் தேடி வரும்.

சில பேருடைய ஜாதககட்டம் தானாகவே உயர்பதவிகளை கொண்டுவந்து சேர்த்துவிடும். சில பேருடைய ஜாதக கட்டத்தின் அமைப்பு, அவர்கள் எவ்வளவுதான் கடின உழைப்பாளியாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும், உயர்ந்த பதவிக்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். இப்படி அதிகப்படியான முயற்சியை எடுத்தும் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லையே, வாழ்க்கையின் அடுத்த படிக்கு கால் எடுத்து வைக்க முடியவில்லையே, என்று வருத்தப் படுபவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஒரு வழிபாட்டு முறைதான் இது.

sucess-man

பெயர், புகழ், பதவி, பட்டம் கிடைத்துக் கொண்டே இருக்க, வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டே போக வேண்டும் என்றால், எந்த தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதைப்பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒருவர் தான் இருக்கின்ற நிலையை அலட்சியப்படுத்தாமல், தனக்கு கொடுத்திருக்கும் சிறிய வேலையையும் கூட, பொறுப்போடு எடுத்து கவனத்தோடு செய்து முடிக்கும் பட்சத்தில், அவரைத்தேடி உயர் பதவி தானாக வரும் என்பதில் சந்தேகமே கிடையாது.

எவர் ஒருவர் தான் செய்து கொண்டிருக்கின்ற வேலையை அலட்சியப்படுத்தி, ‘என்னுடைய தகுதிக்கு இதெல்லாம் ஒரு வேலையா? என்று எண்ணி ஈடுபாடு இல்லாமல் ஏனோதானோ என்று வேலை செய்து கொண்டு இருந்தால்’ அவருக்கு உயர் பதவி கிடைத்தாலும், அவரால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாது. அந்த உயர் பதவிக்கு உண்டான மரியாதையையும் அவரால் கொடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

rich-man

ஆகவே, உயர் பதவி தேவை என்று நினைப்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் எந்த வேலையிலும் அலட்சியத்தோடு செய்யக்கூடாது. என்னிடம் அலட்சியம் இல்லை. விடாமுயற்சி உள்ளது. சிறு துரும்பாக இருந்தாலும், அதை பொறுப்போடு தான் செய்வேன். ஆனாலும் எனக்கு உயர்பதவி கிடைக்கவில்லை. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் ராஜ்ய லட்சுமி.

சுகபோக ராஜ்ய வாழ்க்கை கொடுக்கக் கூடிய சக்தி ராஜ்யலட்சுமி கையில்தான் உள்ளது. அவளுடைய ஆசீர்வாதத்தை நீங்கள் முதலில் முழுமையாக பெற வேண்டும். உங்களுடைய வீட்டில் வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று, எப்பவும் போல் வீட்டை சுத்தப்படுத்தி, பூஜை அறையை அலங்காரம் படுத்தி காலை 6 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்ய தொடங்கலாம்.

ஒரு தாம்புல தட்டில் வாசனை மிகுந்த உதிரி மலர்களை வைத்துக் கொண்டு, நெய் தீபம் ஒன்று ஏற்றிவைத்து விட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு இந்த பூஜையை செய்து வரலாம். தாம்பாளத் தட்டில் இருக்கும் ஒவ்வொரு உதிரி புஷ்பங்களை எடுத்து, மகாலட்சுமியின் பாதங்களில் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

mahalashmi3

ஒவ்வொரு முறை பூக்களை எடுத்து ஸ்வாமியின் பாதங்களில் போடும்போதும் ‘ஓம் ராஜ்ய லட்சுமியே நமஹா’ என்ற மந்திரத்தை சொல்லி பூக்களை போட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது மிகவும் நல்லது. முடிந்தால் வெள்ளை நிறத்தில், ஏலக்காய் போட்ட பாயாசத்தை நைவேத்யமாக படைப்பது மேலும் சிறப்பைத் தரும்.

aval-payasam

உயர் பதவிக்கு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, ஜாதகத்தில் ஏதேனும் தடை இருந்தால் கூட, அதனை நிவர்த்தி செய்யக்கூடிய பூஜை தான் இந்த பூஜை. நம்பிக்கையோடு இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு ராஜ வாழ்க்கை நிச்சயம் உண்டு. என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.