மந்திரம்:
அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
பொது பொருள்:
“மிகவும் சக்தி வாய்ந்தவரும், சூரிய சந்திரனை வெற்றி கொண்டவரும், சிங்கத்தைப் வாகனமாக கொண்டவருமான ஸ்ரீ ராகு பகவானை வணங்குகிறேன்” என்பது இம்மந்திரத்தை பொதுவான பொருளாகும்.
ராகு பகவானுக்குரிய இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் அருகிலுள்ள கோவிலிலுள்ள நவகிரக சந்நிதிக்குச் சென்று, சிவப்பு நிற மலர்களை ராகு பகவானுக்கு சமர்ப்பித்து நெய் தீபமோ அல்லது எள் கலந்த நல்லெண்ணெய் தீபத்தையோ ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபடுவதால் உங்களுக்கு அந்த ராகு பகவானின் தோஷம் நீங்கும். மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் எத்தகைய முன்னேற்றத்திற்கான முயற்சியிலும் உங்களுக்கு தொடர்ந்து வெற்றி கிட்டும் படி அருள்வார் ராகு பகவான்.