எதையும் சாதிக்கும் துணிவு தரும் மந்திரம்

மந்திரம்:

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

பொது பொருள்:
“ஸ்ரீஆஞ்சநேயரைத் துதிப்பதால் புத்தி, மனோபலம், தைரியம், யாருக்கும் அஞ்சா நிலை, உடல்நலம், நல்ல சிந்தனைத் திறன், சிறந்த பேச்சாற்றல் எனக்குக் கிடைக்கட்டும்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருள்.

இம்மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேலையும் 9 முறை அல்லது காலையில் மட்டும் 108 முறை ஜெபம் செய்வது சிறந்தது. மேலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் சந்நிதிக்குச் சென்று வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்குச் சாற்றி இம்மந்திரத்தை 108 முறையோ, முடிந்தால் 1008 முறையோ ஜெபித்தால் மேலே கூறப்பட்ட அனைத்துப் பலன்களையும் நிச்சயம் பெற்று இன்பமாக வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published.