சாய் பாபா மந்திரம் :
ஓம் சாய் சத் சித்
ஆனந்த் ஸ்வரூபாய நமஹ
எனும் “ஸ்ரீ சாய் பாபாவிற்குரிய” மந்திரத்தை தினமும் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் கூறி வரவேண்டும். மேலும் சாய் பாபாவிற்குரிய வியாழக்கிழமைகளில் காலையில் எழுந்து, குளித்து முடித்தவுடன் ஸ்ரீ சாய் பாபாவின் படம் வீட்டிலிருக்கும் பட்சத்தில் அப்படத்திற்கு முன்பு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, ஏதேனும் ஒரு பழம் அல்லது பருப்புகள் அல்லது சில கற்கண்டுகளை அவருக்கு நிவேதனம் அளித்து, இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் சாய் பாபா நிறைவேற்றி தருவார். மேலும் இன்பங்களிலும், துன்பங்களிலும் சமநிலை இழக்காத மனோதிடத்தையும், ethaium சாதிக்கும் துணிவையும் “ஸ்ரீ சாய் பாபா” அருள்வார்.