எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற பௌர்ணமி பூஜை மந்திரம்

விநாயகர் மந்திரம் :

 

ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி
ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
ஓம் காக்க எங்களை உன்கழிலிணை போற்றி

இம்மந்திரத்தை பௌர்ணமி தினத்தன்று காலை 6.00 மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக, அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கோ அல்லது அவரது சந்நிதிக்கோ சென்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து எருக்கம் பூக்களை வைத்து, நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி, பத்திகள் கொளுத்தி உங்கள் மனதின் கவனத்தை முழுவதும் விநாயகர் மீது வைத்து இம்மந்திரத்தை 27 முறை கூறிவழிபட வேண்டும். அப்படி காலையில் இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள், மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக மேற்கூறிய விநாயகர் வழிபாட்டை செய்யலாம்.

இதனால் நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு புதிய முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் வியாபாரம் தொழில் அல்லது வேலையில் கிடைத்து வந்த செல்வம் அல்லது ஊதியம் பெருகும் வாய்ப்பு ஏற்படும். மேலும் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையில் அவர்கள் விரும்பிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவார் அந்த விநாயகப் பெருமான்.

Leave a Reply

Your email address will not be published.