கண் திருஷ்டி நீங்க மந்திரம்
தேவ் தனவ் சித்தகஹ் பூஜித பரமேஷ்வரி
புராணு ரூப பர்ம பர்தந்த்ர வினாஷினி ஓம்
இம்மந்திரத்தை தினமும் அதிகாலை 5 மணிக்குள்ளாக எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற நேரத்தில் மனதில் ஸ்ரீ துர்க்கை அம்மனை மனதார தியானித்து, இந்த மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். மேலும் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலோ அல்லது மாலை 6 மணிக்குள்ளாக துர்க்கை அம்மன் கோவிலுக்கோ அல்லது இந்த தேவியின் சந்நிதிக்கோ சென்று, எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றி, சிவப்பு நிற பூக்களை துர்க்கை அம்மனுக்கு சாற்றி இம்மந்திரத்தை 108 முறையோ அல்லது 1008 முறையோ துர்கை அம்மனை மனமொன்றி தியானித்து ஜெபிக்க, நம்மீதும், நம் குடும்பத்தின் மீதும் உள்ள கண் திரிஷ்டி எனப்படும் கண்ணேறுகள் நீங்கும்.
உலகத்தில் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுடன் இந்த உலகத்தில் வாழும் இடத்தை மனிதர்களாகிய நாம் பகிர்ந்து கொள்கிறோம். இந்த விலங்குகளின் வாழ்க்கையை சற்று உற்று கவனித்தோமேயானால், தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக அந்த விலங்குகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதையும், சில சமயங்களில் சண்டையிடுவதையும் காணலாம். அவை ஐந்தறிவு கொண்ட விலங்குகள் எனவே அதனின் இயல்பான குணத்துடனேயே அந்த விலங்குகள் இருக்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்களும் சில சமயங்களில் அவ்வாறு நடந்து கொள்கின்றனர். ”
“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என புகழ் பெற்ற ஒரு பழைய தமிழ் பழமொழி ஒன்று உண்டு. பொறாமை குணம் ஒரு தீய குணம் என எத்தனையோ ஞானிகள் மக்களுக்கு அறிவுறுத்தினாலும், பெரும்பாலான மக்கள் தங்களின் சக மனிதர்கள் பெரும் வெற்றிகளையோ அல்லது மகிழ்ச்சியையோ கண்டு பொறாமையுடன் அவர்களை பார்க்கும் போது, ஒரு தீய அதிர்வலை அவர்களிடமிருந்து வெளிப்பட்டு, நல்ல நிலையிலிருப்பவர்களை பாதிக்கிறது. இப்படியான பாதிப்பிற்குள்ளானவர்கள் இம்மந்திரத்தை முறையாக ஜெபிப்பதன் மூலம் அப்பாதிப்பிலிருந்து விடுபடலாம்.