கருக்காத்தம்மன் ஸ்லோகம்

கருக்காத்தம்மன் ஸ்லோகம்

 

ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
விவாஹா பாக்கியம் ஆரோக்கியம்
புத்திர லாபம் சதேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்கியம் தேஹிமே சுப்ஹி
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்பரக்ஷகே
காத்யாயினி மஹாமாயே
மஹா யோகின்ய திச்வரி
நந்தகோப சீதம் தேவம்
பதிம் மேகுருதே நமஹா

பெண்களின் கருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற “ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை” அம்மனின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்ததும் திருமணமான தம்பதிகள் ஒன்றாக துதித்து வருவர்களேயானால் பிள்ளை பேறில்லாமல் தவிக்கின்றன தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறுண்டாகும். கருவுற்றிருக்கும் பெண்கள் துதித்து வந்தால் கருச்சிதைவு, கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை நீக்கும். குழந்தை பெற்றெடுக்கும் காலத்தை நெருங்கி வரும் பெண்கள் இம்மந்திரத்தை தினமும் துதித்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.

எந்த ஒரு உயிரும் தாயில்லாமல் பிறப்பதில்லை. இறைமையும், தாய்மையும் ஒன்று தான் என்பது நமது சாத்திரங்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் உறுதியான கருத்தாகும். எல்லா உயிர்களுக்கும் தாய் இருந்தாலும் அகிலம் அனைத்திற்கும் தாயாக இருப்பவர் அன்னை பராசக்தி. பிரபஞ்சம் முழுவதும் தனது சக்தியை நிரம்பச் செய்திருக்கும் அன்னையை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் அருள்வார். பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையை காக்கும் ஸ்ரீகருக்காத்தம்மனின் மந்திரத்தை துதித்து வந்தால் நல்ல மக்கட்பேறு உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published.