ஹயக்ரீவர் மந்திரம்:
“ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”
பொது பொருள் :
ஞானதில் சிறந்து விளங்குபவரும், தூய்மையான தேகம் கொண்டவரும், அணைத்து விதமான கல்விக்கும் கலைகளுக்கும் ஆதாரமாக விளங்குபவருமான ஸ்ரீஹயக்ரீவரை நான் வணங்குகிறேன்
இம்மந்திரத்தை பெருமாளுக்குரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் ஹயக்ரீவர் படமிருந்தால், அவர் படத்திற்கு முன்பு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சாம்பிராணி கொளுத்தி, ஏதேனும் பழம் ஒன்றை நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை கூறி வழிபடலாம். மேலும் ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நிதி இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி, மலர்களை சூட்டி, சிறிது குதிரைக்கொள்ளை நிவேதனமாக வைத்து வழிபட, காலையில் இருந்து வரும் அணைத்து தடைகளும் விலகும். அதோடு நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும். மேலும் நமக்கு ஏற்பட்டிருக்கின்ற தீய சக்திகளின் பாதிப்பகளும் நீங்கும்.