மந்திரம்:
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம்
இம்மந்திரத்தை தினமும் காலையில் குறிப்பாக சூர்யோதய வேளையில், அந்த சூரியனை தரிசித்த வாறே 9 முறை கூறி வழிபட வேண்டும். மேலும் ஞாயிற்று கிழமைகளில் காலை வேளைகளில் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சூரிய பகவான் சந்நிதியில் இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். மேலும் அக்கோவிலிலுள்ள ஸ்தல விருட்சத்திற்கு உங்கள் கைகளால் தூய்மையான நீரை ஊற்ற வேண்டும். இதனால் அந்த சூரிய பகவான் அருள் பெற்று உங்கள் மனதில் இருக்கும் கவலை, கோபம், பயம், குழப்பம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, உங்கள் நல்வாழ்விற்காக நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் வெற்றி அடைவீர்கள்.