இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் பல மனிதர்களுக்கு இன்பங்களை விட துன்பங்களையே தங்களின் வாழ்வில் அதிகம் சந்திக்கின்றனர். அதிகளவு துன்பங்கள் சமயங்களில் அவர்களின் மன உறுதியை மனக்கவலைகளை அதிகரிப்பதோடு, எதிலும் முழுமையான ஈடுபாடு கொண்டு செயல்படமுடியாமல் செய்து வாழ்வில் மேலும் கஷ்டங்களை அதிகப்படுத்துகிறது. இவற்றையெல்லம் போக்கும் சிறப்பான மந்திரமாக “ஸ்ரீ காமாட்சி அம்மன் துக்க நிவாரண அஷ்டகம்” இருக்கிறது.
காமாட்சி அம்மன் துக்க நிவாரண அஷ்டகம்
மங்கள ரூபினி மதியனி சூலினி மன்மத பானியளெ,
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் ஷங்கரி சௌந்தரியெ,
கங்கன பானியன் கனிமுகம் கண்ட நல் கற்பக காமினியெ,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.
கானுரு மலரென கதிரொலி காட்டி காத்திட வந்திடுவாள்,
தானுரு தவஒலி தாரொலி மதியோலி தாங்கியே வீசிடுவாள்,
மானுரு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.
ஷங்கரி சௌந்தரி சதுர்முகன் பொற்றிட சபையினில் வந்தவளெ,
பொங்கரி மாவினில் பொன் அடி வைத்து பொரிந்திட வந்தவளெ,
என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தனல் துர்கையளெ,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.
தனதன தன் தன தவிலொலி முழங்கிட தன்மணி நீ வருவாய்,
கங்கன கன் கன கதிரொலி வீசிட கண்மணி நீ வருவாய்,
பன்பன பம் பன பரை ஒலி கூவிட பண்மணி நீ வருவாய்,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சனல் பானியளே,
கொஞ்சிடும் குமரனை குனமிகு வேழனை கொடுத்தனல் குமரியளெ,
சங்கடம் தீர்திட சமரது செய்தனல் சக்தி எனும் மாயே,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.
என்னியபடி நீ அருளிட வருவாய் என் குல தேவியளெ,
பன்னிய செயலின் பலன் அது நலமாய் பல்கிட அருளிடுவாய்,
கன்னொலி அதனால் கருனையை காட்டி கவலைகள் தீர்பவளெ,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.
இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்,
சுடர் தரும் அமுதே ஸ்ருதிகள் கூறி சுகம் அது தந்திடுவாய்,
படர் தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய துர்கா ஸ்ரீபரமெஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய ஜெயந்தி மங்கலகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி
காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்மனை போற்றி இயற்றப்பட்ட துக்க நிவாரண அஷ்டகம் இது இந்த அஷ்டகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் காஞ்சி காமாட்சியம்மன் படத்திற்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, மனமொன்றி இந்த அஷ்டகத்தை படிப்பதால் உங்களை பாடாய்படுத்தும் அனைத்து துன்பங்களும் நீங்கும். வீட்டின் தரித்திர நிலை மாரி செல்வ சேகரம் ஏற்படும். குடும்பத்தினர் நலம் பெறுவார்கள். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் விலகி செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றிகளை அடையும்.
உயிர்களில் மனிதர்களை மட்டுமே துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் அதிகம் பாதிக்கின்றன. இவை பெரும்பாலும் நமது கர்ம வினை பயன் காரணமாக நமக்கு ஏற்படுவதாக இருக்கிறது.அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக இருப்பவள் அன்னை பராசக்தி. உலகத்தை இயங்க செய்பவள். பண்டைய அகண்ட பாரதம் எனப்படும் தற்போதைய பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்த்து மொத்தம் சக்தி வழிபாட்டிற்குரிய 51 சக்தி பீடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் நகரத்தில் நின்று அருள்புரியும் காமாட்சி அம்மன் கோயில். அந்த காமாட்சி அம்மனின் அஷ்டகத்தை துதிப்பது அனைத்து நலன்களையும் வழங்கும்.