காயத்ரி மந்திரம் உச்சரிக்காமல் எந்த மந்திரம் சொன்னாலும் உங்களுக்கு ஒரு பலனும் இல்லை தெரியுமா? உங்கள் துயரம் தீர இந்த மந்திரம் ஒன்றே போதும்.

எல்லா மந்திரத்திற்கும் தாயாக முதலில் தலைமை வகித்து விளங்கும் காயத்ரி மந்திரம் ஆன்மீகத்தில் மிகவும் முக்கியமான மந்திரம். எந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும் முன்னரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நீங்கள் உச்சரித்த மந்திரத்தின் பலன் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும் என்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த காயத்ரி மந்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பற்றிய முறைகளையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

munivar

தினமும் மூன்று வேளை இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வாழ்வில் எந்த வித இன்னல்களையும் சந்திக்க மாட்டார்கள் என்பது நியதி. காயத்ரி மந்திரம் என்பது சக்தி வாய்ந்த வேத மூல மந்திரம் ஆகும். மற்ற அனைத்து மந்திரங்களுக்கும் தாயாக இருப்பவள் காயத்ரி. விசுவாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மந்திரம் சூரிய பகவானை நோக்கி உச்சரிக்க படுவதாக அமைந்துள்ளது என்பது சிறப்பு வாய்ந்தது.

உச்சரிக்கும் பொழுதே அதிர்வலைகளை உண்டாக்கக் கூடிய இந்த காயத்ரி மந்திரம், மனிதனின் எண்ண அலைகளை சீராக்கி மனதை ஒருநிலைப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டது. காயத்ரி மந்திரம் உச்சரிக்காத எந்த விதமான பூஜை, புனஸ்காரங்களும் முழுமை பெறாது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முழு முதற் கடவுளாகிய விநாயகப் பெருமான் எப்படி அனைத்து தெய்வங்களுக்கு முன்னர் முதன்மையாக வணங்கப்படுகிறார்?

arugampul-vinayagar

அதே போன்ற முதன்மைப் பதவியை மந்திர உச்சாடனத்தில் வகிப்பவர் காயத்ரி. சூரியனின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்கின்ற தன்மைதான் காயத்ரி. சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, சாவித்திரி, மனேன்மணி ஆகியோரின் அம்சங்களை கொண்டவள் காயத்ரி தேவி என்பார்கள். ஒவ்வொரு அம்சத்திலும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் போன்றவை நிகழ்கின்றன. இதனால் தான் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் திறமை கொண்டவர் காயத்ரி தேவி என்பார்கள்.

வேதத்தின் சாரமாக விளங்கும் காயத்ரி மந்திரத்தை கவனமாக காலை, மதியம், மாலை என்று 3 வேளையும் உச்சரிப்பவர்கள் சகல யோகங்களையும் பெறுகின்றனர். காலையில் உச்சரிக்கும் பொழுது காயத்திரிக்காகவும்., மதியம் உச்சரிக்கும் பொழுது சாவித்ரிக்காகவும், மாலையில் சந்தியா வந்தனத்தில் உச்சரிக்கும் பொழுது சரஸ்வதிக்காகவும் இந்த மந்திரத்தை உச்சரிக்கின்றனர். மூன்று வேளை இந்த மந்திரத்தை தவறாமல் உச்சரிப்பவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் உடனே நீங்கி விடும். தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த அத்தனை பாவங்களும் பரிபூரணமாக நீங்கும்.

gayathri-devi

இதனால் உண்டாகும் நற்பலன்கள் என்ன தெரியுமா?
காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும். உங்களை அமைதி இழக்கச் செய்யும் எந்த சூழ்நிலையையும் உடைத்தெறிந்து அமைதியான நிலைக்கு வைத்திருக்கும். உங்கள் சிந்தனைகளை நல்ல வழியில் செலுத்தி நல்ல எண்ணங்களை விதைக்கும். உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் இன்னல்கள் யாவற்றையும் உடனடியாக நீக்கி பஸ்பமாகிவிடும். நீங்கள் யார் என்னும் உண்மையை உங்களுக்கு உணர்த்தும்.

oom

காயத்ரி மந்திரம்:
ஓம் பூர் : புவ : ஸ்வ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந : ப்ரசோதயாத்

பொருள்:
நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை வணங்குகின்றோம் என்பதே இதன் உள்ளார்ந்த பொருள் ஆகும். வேத மந்திரத்திலிருந்து வந்த முதல் மந்திரமாக காயத்ரி மந்திரம் இருப்பதால் இத்தகைய தனி சிறப்பை பெற்று மந்திரங்களின் தலைவியாக மகுடம் சூட்டி நிற்கிறது. அசாத்திய சக்தி பெற்ற இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து நாமும் பலன் பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published.