வெற்றிக்கே நம்மை பிடிக்கும் அளவிற்கு ஒரு மந்திரம் உள்ளதா? என்ற ஆச்சரியத்துடன் தான் இந்த பதிவை தொடங்கப் போகிறோம். துரதிஷ்டமும், தோல்வியும் நமக்கு வரவே கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு. துரதிஷ்டம் வரும். தோல்வியும் வரும். அதையும் கடந்து வெற்றியை நம் பக்கம் ஈர்த்துக் கொள்வது எப்படி என்ற தேடல் தான், நம் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர, துயரமும் தோல்வியும் துரதிர்ஷ்டமும், நம்மைத் தேடி வரும்போது அதைக் கண்டு பயந்து நடுங்கி ஒரு இடத்தில் உட்கார்ந்து விடக்கூடாது. தெருவில் அமர்ந்திருக்கும் நாய்கள் கூட நாம் ஓடினால், நம்மை பின்தொடர்ந்து ஓடி வரும். திரும்பி எதிர்த்து நின்று பாடுங்கள், அது பயந்து ஓடி விடும்.
நாயைக் கீழ்த்தரமாக சொல்வதாக நினைக்க வேண்டாம். நாயும் பைரவரின் வாகனம் தான். இருப்பினும் உதாரணத்திற்கு சொல்லப்படும் கூற்று இது. ஆக, தோல்வியை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் அதற்கு நமக்கு நிச்சயம் இறைவனின் அருள் ஆசி கிடைக்க வேண்டும். குறிப்பாக, சங்கடங்களைப் போக்கி, வெற்றியை நமக்கு தரக்கூடிய சாதாரண கடவுள் விநாயகப் பெருமான். சாதாரண கடவுள் என்றால், நாம் இயல்பாக வெறும் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு விநாயகரை வலம் வந்து வேண்டிக் கொண்டாலே அருளாசியை வழங்கும் அளவிற்கு சாதாரணமாக அவரை நம்மால் நெருங்க முடியும்.
ஏனென்றால் இவர் முழுமுதற் கடவுள் அல்லவா? இவரைப் பற்றிய ஒரு ஸ்லோகத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த உடனேயே, இந்த மந்திரத்தை உச்சரித்து விடுங்கள் இரண்டிலிருந்து மூன்று முறை படித்தால், தானாகவே மனப்பாடம் ஆகிவிடும்.
அதன்பின்பு குளியலறையில் குளித்து முடித்த உடனேயே, உங்கள் உடல் சுத்தத்தோடு மன சத்தத்தோடும் இந்த மந்திரத்தை தாராளமாக உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு தோல்வி இல்லை என்பது மட்டும் உறுதி. பல பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கையில் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் மன தைரியம் உங்களுக்கு வந்து விடும். உங்களை வாழ்க்கையில் உயர்த்தக்கூடிய அந்த அதிஅற்புதமான மந்திரம் உங்களுக்காக இதோ!
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
யானை முகத்தை கொண்டு, பூத கணங்களால் அனுதினமும் வழங்கப்படும், விநாயகப் பெருமானே! உமாதேவியின் புத்திரனானவரே, நாவல் பழம் விளாம் பழத்தின் சாற்றை ருசிப்பவரே, எங்களின் துக்கத்தை தீர்ப்பவரே, உன் பாதத்தை சரணடைகின்றேன் என்பது தான் இதற்கு அர்த்தம். நம்பிக்கை உள்ளவர்கள் விநாயகரது பாதத்தை நம்பிக்கையோடு பற்றிக் கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி வெற்றி வெற்றி என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.