கால பைரவர் மந்திரம்:
ஓம் ஹ்ரீம் பும் பாதுகாய அபதூதாரணாய
குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம் நமஹ ஷியாயே
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் க்ஷம்
க்ஷேத்திரபாலாய கால பைரவாய நமஹ
மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் “ஸ்ரீ கால பைரவரை” மனதில் நினைத்து ஏதேனும் ஒரு பழத்தை நிவேதனமாக வைத்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட வேண்டும். மாலை வேளையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட நமக்கு ஏற்பட இருந்த தீவினைகள் நீங்கும். மனதிலிருந்த வீண் அச்சங்கள் ஒழியும். குறிப்பாக மரணத்தை குறித்த பயங்கள் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.
கால பைரவர் சிறு குறிப்பு
புராண காலத்தில் தாட்சாயிணி தேவியை அவளின் தந்தை தட்சன் அவமான படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டாள். இதனால் மிகுந்த சோகத்திலாழ்ந்த சிவ பெருமான் தாட்சாயிணியின் உடலை கையில் ஏந்திய வாறு கோபமாக திரிந்த போது, அந்த சிவ பெருமானை அமைதிப்படுத்த திருமால் தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை பல துண்டுகளாக அறுத்து இந்த பாரத தேசமெங்கும் தேவியின் அந்த உடல் துண்டுகளை விழச் செய்தார்.
அந்த இடங்கள் இப்போது சக்தி பீட கோவில்களாக உள்ளன. இப்போது அம்மனின் சக்தி பீடங்களாக இருக்கும் அந்த புண்ணிய தளங்களை, சிவ பெருமானே பைரவர் வடிவம் தரித்து காவல் புரிவதாக கருதப்படுகிறது. இந்த பைரவர் ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் ஆவார். நவகிரகங்களின் பிராணனாக பைரவர் இருப்பதால், நவ கிரகங்களில் எந்த ஒரு கிரக பெயர்ச்சிகளால் கேடு பலன்களை சந்திக்க இருக்கும் ராசியினர் ஸ்ரீ கால பைரவரை வழிபடுவதன் மூலம், கெடுதலான பலன்கள் ஏற்படுவதை தடுத்துக்கொள்ளலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்.