குரு கிரகத்தின் அருளை பெற்று தரும் குரு பகவான் துதி

குரு பகவான் துதி

 

குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.

வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி

முழுமையான சுபகிரகமான குரு பகவானுக்குரிய சக்தி வாய்ந்த மந்திர துதி இது. இத்துதியை தினமும் காலையில் 9 முறை துதிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். குரு பகவான் வழிபாட்டிற்குரிய வியாழக்கிழமைகளில் இம்மந்திரத்துதியை கோவில்களில் நவகிரகங்களில் குருபகவான் விக்கிரகத்திற்கு கொண்டை கடலை மாலை சாற்றி, மஞ்சளை நிற பூக்களை சமர்ப்பித்து, 27 முறை இத்துதியை படிப்பதால் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருக்கும் குரு பகவானால் கெடுதலான பலன்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும். வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு கூடிய விரைவில் வேலை கிடைக்கும். பணவசதியை பெருக்கும் யோகங்கள் உண்டாகும்.

இரவு நேரங்களில் வானில் நாம் பார்க்கும் போது பொன்னிறத்தில் மின்னும் ஒரு கிரகமாக இருப்பது வியாழன் எனப்படும் குரு கிரகம் ஆகும். எனவே தான் நமது பண்டைய தமிழ் வானியல் சாஸ்திர அறிஞர்கள் வியாழன் கிரகத்திற்கு பொன்னன் என்கிற ஒரு பெயர் கொண்டு வியாழன் எனப்படும் குரு பகவானை அழைத்தனர். தன்னை வழிபடும் அனைவருக்கும் அருட்கடாச்சத்தை பொழிபவர் குரு பகவான். அவருக்குரிய இந்த துதியை முழுமனதோடு படித்து வருபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published.