பணத்தை சரியான வழியில் சம்பாதித்தால் மட்டும் போதாது. எதிர்கால தேவைகளுக்காக அதை முறையாக சேமிக்க வேண்டியது அவசியமாகும். எல்லா மக்களும் ஏதாவது வேலை, தொழில் செய்து பொருளீட்டுகின்றனர். அதை சேமிக்கவும் செய்கின்றனர். ஆனால் அனைவராலுமே குறைந்த காலத்தில் மிக பெறும் அளவில் பொருளை சேகரிக்க முடியாமல் போகிறது. பொருள் சேர்க்கை மட்டுமன்றி, பொன் எனும் தங்க ஆபரணங்கள் போன்றவற்றின் சேர்க்கை உங்களுக்கு ஏற்பட துதிக்க வேண்டிய “குரு மூல மந்திரம்” இதோ.
குரு மூல மந்திரம்
ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ்
பொன்னன் என்பதும் முழுமையான சுப கிரகமான குரு பகவானின் மூல மந்திரம் இது. மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருபவர்கள் வாழ்வில் பல நன்மையான மாற்றங்கள் ஏற்படும். வியாழக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உரு ஜெபிப்பவர்களுக்கு பொன் ஆபரண சேர்க்கை, பொருள் சேர்க்கை உண்டாகும். 40 நாட்களில் இம்மந்திரத்தை 16000 உரு ஜெபித்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்க துவங்கும்.
நாம் வானில் இரவு நேரத்தில் பார்க்கும் போது பொன்னிறத்தில் ஒளிரும் ஒரு கிரகத்தை காணலாம். அந்த கிரகம் நமது ஜோதிடத்தில் பொன்னன், குரு என அழைக்கப்படும் வியாழன் கிரகமாகும். ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடகாலம் சஞ்சாரம் செய்யும் கிரகமாக குரு கிரகம் இருக்கிறது. எந்த ஒரு நபரின் ஜாதகத்திலும் குரு கிரகம் நல்ல நிலையில் இருக்கும் போது அந்நபருக்கு அனைத்து விதமான வளங்களும் வந்து சேரும். அப்படியில்லாதவர்கள் குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதிப்பதால் நன்மையான பலன்களை பெறலாம்.