குழந்தை பாக்கியம் பெற உதவும் எளிய பரிகார மந்திரம்

மந்திரம்:

“ஓம் க்லீம் ஸெளம் ஹ்ரீம் ஸர்வ செளபாக்கியம்
தேவி அருள் ஆனந்த ரூபி நாராயணி மமவஸம் குரு குரு ஸ்வாஹா”.

பொது பொருள்:

ஆனந்த ரூபமாய் வீற்றிருக்கும் நாராயணனின் துணைவியே, எங்களுக்கு அணைத்து சௌபைக்யங்களோடு மழலை செல்வத்தை தந்தருள வேண்டுகிறேன்.

இந்த மந்திரத்தை சந்தானலட்சுமியின் படத்திற்கு முன் நின்று, தினமும் 108 முறை வீதம் 48 நாட்கள் ஜெபிக்க வேண்டும். கற்கண்டு, வடை, பாயசம், தேன், தேங்காய், மலர், சந்தனம்,ஆகியவற்றை வைத்து தூபதீபம் காட்டி ஜெபம் செய்ய சித்தியாகும். மேலும் பெண்கள், அவர்களின் மாதாந்திர அவஸ்தை நீங்கி, நான்கு நாட்கள் கடந்த பின் ஆலயம் சென்று குரு பகவானை வணங்க வேண்டும். அதோடு கோவிலில் வடகிழக்கு பகுதியை பெருக்கி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.