சக்தி வாய்ந்த நவ துர்க்கை மந்திரம்

நவ துர்க்கை மந்திரம்

 

தேவீ ஸைலபுத்ரீ
வன்தே வாஞ்சிதலாபாய சன்த்ரார்தக்றுதஸேகராம்
வ்றுஷாரூடாம் ஸூலதராம் ஸைலபுத்ரீ யஸஸ்வினீம்

தேவீ ப்ரஹ்மசாரிணீ
ததானா கரபத்மாப்யாமக்ஷமாலா கமண்டலூ
தேவீ ப்ரஸீதது மயி ப்ரஹ்மசாரிண்யனுத்தமா

தேவீ சன்த்ரகண்டேதி
பிண்டஜப்ரவராரூடா சன்தகோபாஸ்த்ரகைர்யுதா
ப்ரஸாதம் தனுதே மஹ்யம் சன்த்ரகண்டேதி விஸ்ருதா

தேவீ கூஷ்மாம்டா
ஸுராஸம்பூர்ணகலஸம் ருதிராப்லுதமேவ ச
ததானா ஹஸ்தபத்மாப்யாம் கூஷ்மாண்டா ஸுபதாஸ்து மே

தேவீஸ்கன்தமாதா
ஸிம்ஹாஸனகதா னித்யம் பத்மாஸ்ரிதகரத்வயா
ஸுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கன்தமாதா யஸஸ்வினீ

தேவீகாத்யாயணீ
சன்த்ரஹாஸோஜ்ஜ்வலகரா ஸார்தூலவரவாஹனா
காத்யாயனீ ஸுபம் தத்யாதேவீ தானவகாதினீ

தேவீகாலராத்ரி
ஏகவேணீ ஜபாகர்ணபூர னக்னா கராஸ்திதா
லம்போஷ்டீ கர்ணிகாகர்ணீ தைலாப்யக்தஸரீரிணீ
வாம பாதோல்லஸல்லோஹலதாகண்டகபூஷணா
வர்தனமூர்த்வஜா க்றுஷ்ணா காலராத்ரிர்பயங்கரீ

தேவீமஹாகௌரீ
ஸ்வேதே வ்றுஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதரா ஸுசிஃ
மஹாகௌரீ ஸுபம் தத்யான்மஹாதேவப்ரமோததா

தேவீஸித்திதாத்ரி
ஸித்தகன்தர்வயக்ஷாத்யைரஸுரைரமரைரபி
ஸேவ்யமானா ஸதா பூயாத் ஸித்திதா ஸித்திதாயினீ

துர்க்கை அம்மனே மிகவும் சக்தி வாய்ந்தவள். அப்படியிருக்க இங்கே “நவ துர்க்கைகளின்” அருளை பெற்று தரும் சக்தி வாய்ந்த மந்திரம் தரப்பட்டிருக்கிறது. இந்த மந்திரத்தை தினந்தோறும் உடல் மற்றும் மனசுத்தி கொண்டு துர்க்கை அம்மனிடம் மிகுந்த நம்பிக்கை வைத்து துதித்து வருபவர்களுக்கு வறுமை நிலை நீங்கும். மனதில் அமைதி உண்டாகும். உங்களை சார்ந்தவர்கள் துர்க்கை அம்மனால் பாதுகாக்கப்படுவார்கள். துஷ்ட சக்திகள், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். வாழ்க்கையில் சகல வசதிகளும் பெறும் அமைப்பு ஏற்படும். உடல், மனம், ஆன்மா ஆகிய அனைத்தும் இறை சக்தியால் நிறைந்திருக்கும்.

“சைலபுத்ரி,பிரம்மச்சாரிணி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயிணி, காலராத்ரி, மஹாகௌரீ, சித்திதாத்ரி” ஆகிய நவ துர்க்கை தேவிகளின் பாதங்களை நமஸ்கரிக்கிறேன். எருதின் மீது பயணிப்பவளும், கையில் கமண்டலத்தை தரித்திருப்பவளுமான துர்க்கையை வணங்குகிறேன். பக்தர்களுக்கு கருணை புரிபவளும், புலி, சிங்கங்களை தனது வாகனமாக கொண்டு அரக்கர்களுடன் போரிட்டு வென்று, துஷ்ட சக்திகள் அனைத்தையும் அழிக்கும் சக்தி வாய்ந்தவளுமாகிய நவ துர்க்கை தேவியரை நான் நமஸ்கரிப்பதால் அனைத்து நன்மைகளும் எனக்கு உண்டாகட்டும் என்பது இந்த மந்திரத்தின் சுருக்கமான பொருளாகும்.

Leave a Reply

Your email address will not be published.