சித்து விளையாட்டுக்களை செய்ய உதவும் எளிய மந்திரம்

மந்திரம்:

ஓம் அம் நம

இந்த மந்திரத்தை முறையாக ஜெபிப்பதனால் சித்தர்களின் மூலம் சித்து விளையாட்டை கற்கும் வழி பிறக்கும். அதன் பின் சித்து விளையாட்டுகளை நாம் எளிதில் செய்யலாம். தமிழ் மொழியின் சக்தியை உணர்தவர்களுக்கு அதில் உள்ள பல மந்திர ஆற்றல்களின் சக்தியும் புரிந்திருக்கும். ஓம் என்ற பிரணவ மந்திரத்தோடு, தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களோடு “ம்”, “ங்” போன்ற எழுத்துகளை(பீஜங்கள்) சேர்த்து சரியான முறையில் உச்சரிக்கையில் அது சக்தி பெறுகிறது என்று பிருகு முனிவர் கூறுகிறார். அந்த வகையை சார்ந்ததே மேலே உள்ள மந்திரம். ஒரு மனிதன் சித்திகளை பெற “ம்” பீஜம் உதவுகிறது. “ங்” பீஜம் முக்தியை பெற உதவுகிறது.

“ங்” பீஜம் மந்திரம்:

ஓம் அங் நம – இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் முக்தியை பெறுவதற்கான ஞானம் கிடைக்க வழிபிறக்கும். இது போன்ற மந்திரங்களை காலை பிரம்ம முகூர்த்த வேலையில் ஒரு லட்சம் முறை ஜபித்தால் அதற்கான பலன்களை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.