சிறந்த பலன்களை தரும் மகா சுதர்சன மந்திரம்

நமது அன்றாட வாழ்வில் காலையில் தொடங்கி இரவு உறங்க போவது வரை பல பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். இதில் சிலருக்கு பல விடயங்கள் குறித்த பயங்கள், கவலைகள் ஏற்படுகின்றன. மற்ற சிலர் பயணங்களின் போதும், வேறு விடயங்களில் ஈடுபடும் போதும் பல ஆபத்துகளை சந்திக்கும் நிலை இருக்கிறது. மற்றும் எல்லாருக்குமே ஏதோ ஒரு வகையில் பீடைகள் எனப்படும் தரித்திர தோஷங்கள் பீடித்திருக்கின்றன. இவையெல்லாவற்றையும் போக்கும் அற்புதமான “மகா சுதர்சன மந்திரம்” இதோ.

chakrathalwar

மகா சுதர்சன மந்திரம்

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய
பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர
ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி

ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய
மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே
ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன
கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

sudarshan_chakra

மிகவும் சக்தி வாய்ந்த மகா சுதர்சன மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் முறைபடி துதித்து வருபவர்களுக்கு பல விதமான நன்மைகள் உண்டாகும். விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பது தடவை – கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும். சௌபாக்கியம் பிறக்கும். அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும். தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.

மும்மூர்த்திகளில் அனைத்து உயிர்களையும் காக்கும் தொழிலை புரிபவர் திருமால் எனும் மகாவிஷ்ணு ஆவார். இந்த மகாவிஷ்ணுவின் அடையாளங்களாக இருப்பது கதை ஆயுதம் மற்றும் தனது தோளில், அவரது இரண்டாவது ஜோடி கைகள் ஏந்தியிருக்கும் சங்கு மற்றும் சுதர்சன சக்கரம் ஆகும். இதில் சுதர்சன சக்கரம் என்பது திருமாலின் அம்சம் கொண்ட ஒரு ஆயுதமாகும். எப்படிப்பட்ட தீமைகளையும் வேரறுத்து நன்மைகளை மட்டும் பொழியும் சுதர்சன சக்கர மகா மந்திரத்தை நாம் துதித்து வந்தால் வாழ்வில் பல மேன்மைகளை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.