முற்காலத்தில் நமது நாட்டில் அனைத்து வளங்களும் நிரம்பியிருந்தது. எனவே இங்கு கல்வி என்பது நம்மை மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்தும் அடிப்படையில் அமைந்திருந்தது. நூற்றாண்டுகளில் ஏற்பட்ட வாழ்க்கை மற்றும் கலாச்சார மாறுபாடுகளால் கற்கும் கல்வி என்பது வெறும் வேலைபாய்ப்பு பெறுவதற்காக மட்டுமே என்கிற நிலை உலகம் முழுவதும் உண்டாகிவிட்டது. அப்படி தகுந்த கல்வி கற்றும் வேலை கிடைக்காமல் தவிக்கும் நபர்களுக்கான “லட்சுமி தேவி மந்திரம்” இதோ.
லட்சுமி தேவி மந்திரம்
யாதேவி சர்வ பூதேஷு அபர்ணி
ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமோ நமஹ்
மிகவும் ஆற்றல் வாய்ந்த தேவி வழிபாட்டின் போது பயன்படுத்தப்படும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும், பூஜையறையில் லட்சுமி படத்திற்கு முன்பு தீபமேற்றி இம்மந்திரத்தை 27 முறை துதிப்பது சிறப்பானதாகும். தினமும் காலையில் 41 நாட்களுக்கு நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபமேற்றி, இம்மந்திரத்தை 54 முறை துதித்து லட்சுமி தேவியை வழிபடுவதால் வேலை தேடி அலையும் நபர்களுக்கு, தேவியின் அருளால் வேலை கிடைக்கும்.
வருடந்தோறும் உலகளவிலும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்காலங்களில் பல நாடுகளிலும் வாழ்க்கை தரம் உயர்ந்து வருவதால் அனைவருமே கல்வி கற்கின்றனர். ஆனால் கல்வி கற்ற அனைவருக்குமே அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில் தான் பெரும் போராட்டமாக இருக்கிறது. ஒருவருக்கு வேலை கிடைக்க அவரின் தகுதி, திறமை ஆகியவற்றோடு தெய்வ அருளும் அவசியமாகிறது. இம்மந்திரம் கூறி வழிபடுபவர்களுக்கு அந்த தெய்வத்தின் அருளால் அவர்கள் விரும்பியது கிடைக்கப்பெறுவர்கள்.