மந்திரம்:
“ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்”
பொது பொருள்:
முல்லை மலர், தாமரை நூல் போன்றவை போல வெண்மையான நிறம் உடையவரே, அசுரர்களுக்கெல்லாம் குருவே, அனைத்து சாஸ்திரங்களையும் நன்கு கற்று தேர்ந்தவரே, பிருகுவின் புதல்வனே, சுக்கிர பகவானே உங்களை வணங்குகிறேன்.
இம்மந்திரத்தை வெள்ளியன்று விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையிலும், மாலை சந்தியா வேளையிலும் நல்ல உடற்சுத்தியோடு மகா லட்சுமியின் படத்திற்கு முன் நெய்தீபம் ஏற்றி வைத்து, சர்க்கரை அல்லது கற்கண்டை நைவேத்தியமாக படைத்து, 108 முறை ஜெபிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர உங்களின் வாழ்வில் அனைத்து விதமான செல்வம் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். சிறுநீரக, நீரிழிவு நோய்களுக்கு காரகன் சக்கிர பகவான் என்பதால் அது சம்மந்தமான பாதிப்புகள் நீங்கும்.