தன்வந்திரி ஜெயந்தி! தீராத நோய் தீரவும், ஆயுசுக்கும் ஆரோக்கியமாக வாழவும், நாளை மாலை 6:00 மணிக்குள் 1 டம்ளர் தண்ணீரை, இந்த மந்திரத்தை சொல்லி இப்படி குடித்து விடுங்கள்.


[og_img]

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் நாம் தன்வந்திரி பகவானை தினமும் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஐப்பசி மாதம் தேய்பிறை திரியோதசி அன்று தன்வந்திரி பகவான் பூமியில் அவதரித்த நாளாக சொல்லப்படுகிறது. இதை தன்வந்திரி பகவானின் பிறந்தநாள் என்றும் சொல்லுவார்கள். இந்த தன்வந்திரி ஜெயந்தியானது இன்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை மாலை 6.00 மணி வரை இருக்கின்றது. அதாவது அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கே தொடங்கக்கூடிய இந்த தன்வந்திரி ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த நாளில் நோய் நொடி தீர நாம் தன்வந்திரி பகவானே எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய சுலபமான வழிபாட்டினை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

dhanvantari

இன்று சனிக்கிழமை 6:30 மணிக்கு மேலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். அப்படி இல்லையா நாளை காலை விடிந்ததிலிருந்து, நாளை மாலை 6.00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்துக் கொள்ளலாம். வழக்கம்போல பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் தன்வந்திரி பகவானின் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பெருமாளின் படத்தின் முன்பு இந்த வழிபாட்டை செய்யலாம்.

ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை பூஜை அறையில் வைத்துவிட்டு, அந்த டம்ளர் தண்ணீரில் ஒரே ஒரு துளசி இலை போட்டுக் கொள்ளுங்கள். உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்கள் எந்த தண்ணீரை குடிப்பார்களோ சுடு தண்ணீர், பச்சை தண்ணீர் எது வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். எந்த டம்ளரில் வேண்டும் என்றாலும் தண்ணீரை வைத்து கொள்ளுங்கள். சுவாமிக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.

water

தன்வந்திரி பகவானை மனதார வேண்டி, நோய் நொடி தீர வேண்டும் மருந்து மாத்திரை சாப்பிடுவது குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடுத்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான் மந்திரம் இதோ உங்களுக்காக.

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய!

ஸர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நம!

dhanvantiri 2

இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். பின்பு சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து விட்டு பூஜையை நிறைவு செய்துவிட்டு, இந்த தண்ணீரை நோய் நொடி உள்ளவர்கள் குடித்து விட வேண்டும். உங்களுடைய வீட்டில் உங்களுடைய உறவினர்களுக்கு யாருக்கேனும் தீராத நோய் உள்ளது. படுத்த படுக்கையாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்காக, நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு இந்த தண்ணீரை ஒரு சொட்டு அவர்களுக்கு கொடுத்தால் கூட போதும். தீராத நோய் படிப்படியாக தீர தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published.