வாழ்க்கையில் நாம் நினைக்கின்ற, விரும்புகின்ற வகையில் அனைத்துமே நடந்து விடுவதில்லை. நமது வாழ்வில் நடக்கும் பலவற்றிற்கும் நமது விதி தான் காரணம் என்பது ஒரு பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட விதியை நாம் முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும், பல நன்மைகளை பெற உதவும் ஒரு ஆன்மீக வழிமுறை தான் மந்திரம் உரு ஜெபித்தல். அந்த வகையில் அன்னை தாரா தேவி மந்திரம் துதிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
தாரா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்த்ரீம் ஹும்பட்
அனைத்தையும் வழங்கும் அன்னை தாரா தேவிக்குரிய மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையான 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து உடல், மன சுத்தியுடன் மனதில் தாரா தேவியை தியானித்து 108 முதல் 1008 மந்திர உரு ஜெபிக்க வேண்டும். இப்படி 48 நாள் அல்லது 1 மண்டலம் துதித்து வந்தால் நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். உங்களுக்கு தேவையான அரசாங்க ரீதியான காரியங்களில் உங்களுக்கு வெற்றி உண்டாகும்.
பராசக்தியான அன்னை பார்வதி தேவியின் ஒரு வடிவம் தான் தாரா தேவி. நமது நாட்டின் வடக்கு மாநிலங்களில் அதிகம் வழிபடப்படுகிறார் அன்னை தாரா தேவி. தந்திரிகர்களை பொறுத்த வரை துர்க்கா தேவியின் மறுவடிவம் தான் தாரா தேவி. புத்த மதத்தினராலும், ரஷ்ய நாட்டில் இருக்கும் ஒரு பழங்குடி மக்களாலும் தாரா தேவி வணங்க படுகிறார். கேட்ட வரங்களை தரும் தாரா தேவியை இம்மந்திரம் கொண்டு துதிப்பதால் நமது வாழ்வில் நன்மைகள் பல பெறலாம்.