திருமணத்தடையை போக்கும், கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும், அருணகிரிநாதர் அருளிய, சக்திவாய்ந்த மந்திரம்! இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தாலே போதும்.


திருமணம் ஆகாமல் இருப்பது ஒரு பிரச்சனை என்றால், திருமணமான பின்பு, கணவன் மனைவி ஒற்றுமை இல்லை என்பது பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. ஆகவே, திருமணத்தடையை நீக்குவதற்கும், வீட்டில் சண்டை சச்சரவு இல்லாத நிம்மதியான வாழ்க்கை நிளவுவதற்கும், அருணகிரிநாதர் அருளிய, திருப்புகழை பற்றித்தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எம்பெருமான் முருகப் பெருமானை நினைத்து, காலையில் எழுந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றிவைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்.

திருமணம் ஆகாத தங்களுடைய குழந்தைகளுக்காக, பெற்றோர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்து, தங்களுடைய பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளலாம். திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை, சண்டை சச்சரவுகள் என்று குடும்பத்தில் வந்து கொண்டே இருந்தால், அவரவரே இந்த மந்திரத்தை, அவரவர் வாயினால் உச்சரித்து மனதார, மனமுருகி வேண்டிக் கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் கை மேல் பலன் உண்டு. பிரிந்த தம்பதியினர், மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, தாராளமாக இந்த மந்திரத்தை உச்சரிக்க, கைமேல் பலன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள், 6 முறை உச்சரிக்க வேண்டும். ஜாதக தோஷத்தின் மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு கூட, அந்த தோஷத்தினால், ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்க கூடிய சக்தி, இந்த மந்திரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்காக அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் இதோ!

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து …… வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் …… வசைகூற

 

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப …… மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து …… குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த …… மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த …… அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் …… களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த …… பெருமாளே.

சொல் விளக்கம்

விறல்மாரன் … வீரனாம் மன்மதன்

ஐந்து மலர்வாளி சிந்த … ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,

வானி லிந்து மிக வெயில் காய … ஆகாயத்தில் நிலவு அதிகமாக
வெயில் போலக் காய,

மிதவாடை வந்து … நிதானமான தென்றல் காற்று வந்து

தழல்போல வொன்ற … தீப்போல வீசிப் பொருந்த,

வினைமாதர் தந்தம் வசைகூற … வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம்
வசை மொழிகளைக் கூற,

குறவாணர் குன்றி லுறை … குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்

பேதை கொண்ட … (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
நான் அடைந்த

murugan

கொடிதான துன்ப மயல்தீர … கொடிய துன்ப விரக மயக்கம் தீர,

குளிர்மாலை யின்கண் … குளிர்ந்த மாலைப் பொழுதினிலே

அணிமாலை தந்து … நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து

குறைதீர வந்து குறுகாயோ … என் குறையைத் தீர்க்க வந்து
அணுகமாட்டாயா?

மறிமா னுகந்த இறையோன் … இள மானை உகந்து ஏந்தும்
இறைவன் சிவபிரான்

மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா … (உன் உபதேசம் பெற்று)
மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,

மலைமாவு சிந்த … கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்)
வீழ்ந்து படவும்,

அலைவேலை யஞ்ச … அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,

வடிவே லெறிந்த அதிதீரா … கூரிய வேலை வீசிய அதி தீரனே,

அறிவால் அறிந்து … அறிவு கொண்டு உன்னை அறிந்து,

உன்னிருதாள் இறைஞ்சும் … உனது இரு தாள்களையும் வணங்கும்

அடியார் இடைஞ்சல் களைவோனே … அடியார்களின் துயரைக் களைபவனே,

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து … அழகிய செம்பொன்
மயில்மீது அமர்ந்து

அலைவா யுகந்த பெருமாளே. திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
பெருமாளே.

திருமணமாகாத ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், இந்த மந்திரத்தை உச்சரிப்பதோடு சேர்த்து, சுமங்கலிப் பெண்களுக்கு, வெற்றிலை, பாக்கு, பூ சேர்த்த தாம்பூலத்தை, தானமாக கொடுத்து, 11 சுமங்கலி பெண்களை ஒன்றாக நிற்க வைத்து, அவளுடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது, எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தால், உங்கள் வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைத்து, உங்களால் முடிந்த உணவை பரிமாறி, தாம்பூலம் கொடுத்து, ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் நம்பிக்கையோடு உச்சரிப்புடன், சேர்த்து அதனுடைய அர்த்தத்தையும் புரிந்து கொண்டு உச்சரிப்பதால் கிடைக்கக்கூடிய மனநிறைவு அதிகமாகவே இருக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து, திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் இருவருக்கும், விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றும், திருமணம் என்பது ஒரு வரப்பிரசாதம், அதை வரமாக பெற்றுக் கொண்டவர்கள் இல்லற வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்த திருச்செந்தூர் முருகப் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published.