எல்லா மனிதர்களின் வாழ்விலும் செல்வம், திருமணம் மற்றும் குழந்தை பேறு இவை மூன்றும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒரு நபரின் ஜாதகத்தில் வியாழன் எனப்படும் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க பெற்றாலும், அவரது திசை காலத்திலும் மேற்கண்ட விடயங்கள் ஒரு ஜாதகருக்கு தானாகவே அமைந்து விடும். அப்படியில்லாதவர்கள் அவற்றை பெற துதிக்க வேண்டிய “வியாழன் ஸ்லோகம்” இதோ.
வியாழன் ஸ்லோகம்
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினனுக்கு அதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல் நீடுபோகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இணையடி போற்றி போற்றி
வியாழன் எனப்படும் குரு பகவானை போற்றும் தமிழ் துதி இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 21 முறை துதித்து வருவது நல்லது. வியாழக்கிழமைகளில் காலையில் குரு பகவான் சந்நிதிக்கு சென்று, குரு பகவானுக்கு வெள்ளை கொண்டை கடலைகள் நிவேதனம் வைத்து, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து இம்மந்திரத்தை 108 முறை துதிப்பதால் திருமணம் கால தாமதம் ஆகும் ஆண் – பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் பணம் சேமிப்பு அதிகரிக்கும்.
நமது புராணங்களில் “வியாழன்” எனப்படும் நவகிரக நாயகனாகிய குரு பகவான் பிரகஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். வானுலக தேவர்களுக்கு தேவ குருவாக இருப்பவர் குரு பகவான் ஆவார். தன்னுடைய சக்திகள் அனைத்தையும் தேவர்கள் மனிதர்கள் மற்றும் இன்ன பிற உயிர்கள் நன்மை பெற அருள்மழையாக பொழிபவர். ஒரு மனிதனுக்கு மிக சிறந்த யோகங்கள், செல்வ சிறப்புகளையும் அளிப்பவராக வியாழ பகவான் இருக்கிறார் அவருக்குரிய இம்மந்திரத்தை தினமும் துதிப்போர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.