தீமைகள் ஒழிந்து நன்மைகள் ஏற்படுத்தும் அனுமன் ஸ்தோத்திரம்

அனுமன் ஸ்தோத்திரம்

 

நமாமி தூதம் ராமஸ்ய ஸுகதம் ச ஸுரூர்தருமம்
பீனவ்வ்ருத்த மஹாபாஹும் ஸர்வஷத்ரூ நிவாரணம்
நாநாரத்ன ஸமாயுக்தகுண்டலாதி விராஜிதம்
ஸர்வதா பீஷ்ட தாதரம் ஸதாம் வை திருட மாஹாவே

வாஸினம் சக்ரதீர்த்தஸ்ய தக்க்ஷிண ஸ்தகிரௌஸதா
துங்காம்போதி தரங்கஸ்ய வாதேன பரிஷோபிதே
நாநாதேஷாகதை : ஸத்பி : ஸேவ்யமானம் ந்றுபோத்தமை
தூபதீபாதி நைவேய்த்யை: பஞ்சகாத்யைச ஷக்தித:

பஜாமி ஸ்ரீஹனுமந்தம் ஹெமகாந்தி ஸமப்ரபம்
வியாசதீர்த்த யதீந்த்ரேண பூஜிதம் ச விதானத:
த்ரிவாரம் ய: படேன் நித்யம் ஸ்தோத்ரம் பக்த்யா த்விஜோதம :
வாஞ்சிதம் லபதேபீஷ்டம் ஷண்மாஸாப்யந்தரே கலு

புத்ரார்தீ லபதே புத்ரான் யஷோர்த்தீ லபதே யஷ :
வித்யார்த்தி லபதே வித்யாம் தனார்தீ தனமாப்னுயாத்
ஸர்வாதா மாஸ்து ஸந்தேஹோ ஹரி : ஸாக்ஷீ ஜகத்பதி:
ய: கரோத்யத்ர ஸந்தேஹம் ஸ யாதி நரகம் துருவம்
யந்த்ரோதாரக ஹனுமத்ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

ராமதூதரான ஸ்ரீ அனுமனின் பெருமைகளை கூறும் ஸ்தோத்திரம் இது இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் மனதில் ஸ்ரீராமரையும், அனுமனையும் நினைத்து இந்த ஸ்தோத்திரத்தை படிக்கச் வேண்டும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கோ அல்லது கோவிலில் உள்ள அவரின் சந்நிதிக்கோ சென்று துளசி மாலையை அனுமனுக்கு சாற்றி இந்த ஸ்தோத்திரத்தை அவரது சந்நிதியில் துதித்து வந்தால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் பாதிப்புகள், சித்த பிரம்மை போன்றவை நீங்கும். தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் உடல் பலம் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை ஒழியும்.தொழில், வியாபாரங்களில் ஏற்பட்டுள்ள மந்த நிலை நீங்கி லாபங்கள் பெருகும்.

ஸ்ரீ ராமரின் அன்பிற்குரியவரும், மிகவும் வலிமை வாய்ந்தவரும், எதிரிகள் அனைவரையம் தோற்கடிக்கும் ஈடில்லா சக்தி கொண்டவரான ஸ்ரீ அனுமனை வணங்குகிறேன். விலைமதிப்பற்ற அணிகலன்களை அணிந்தவரும், போரில் எதிராளிகளை புறமுதுகு காட்டி ஓட செய்பவரும், சக்ர தீர்த்தத்திற்கு தெற்கே இருக்கும் குன்றில் வசிப்பவருமான அனுமனின் பாதம் பணிகிறேன். பொன்னை போன்று பிரகாசிப்பவரும், பக்தர்களின் அனைத்து துன்பங்களையும் தீர்ப்பவருமான அனுமனின் பாதம் பணிந்து வணங்குகிறேன் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் சுருக்கமான பொருளாகும்.

Leave a Reply

Your email address will not be published.