தொழில், வியாபாரம், வேலை என எதுவாக இருந்தாலும் அதில் பன் மடங்கு முன்னேற்றம் தரக்கூடிய ஒரு அற்புதமான வேத காலத்து மந்திரம் இதோ

உலகில் மனிதனாக பிறந்தவர்கள் உழைத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் உயர்வு பெற முடியும். தன்னுடைய குடும்பத்திற்கு சிறந்த வாழ்வை அளிக்க ஒவ்வொருவருமே, அவர்களின் தகுதிக்கு ஏற்ற வகையில் ஏதாவது ஒரு வேலை அல்லது தொழில் அல்லது வியாபாரம் செய்து பொருள் ஈட்டுகின்றனர். அதில் சிலருக்கு தாங்கள் பணிபுரிகின்ற அல்லது தொழில் செய்கின்ற இடங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு தொழில், வியாபாரங்கள் சரிவர நடைபெறாமல் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படும் நிலைக்கு கொண்டு செல்கிறது. இத்தகையவர்கள் தங்களின் தன்னம்பிக்கையுடன் சேர்த்து தெய்வ நம்பிக்கையுடன் துதிப்பதால் சிறப்பான வாழ்வை கொடுக்க வல்ல ஒரு ஆற்றல் மிக்க மந்திரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

oom

ரிக் வேதம் மந்திரம்

ஓம் புரித புரி தேஹினோ மா தபம்
புரிய பர் புரி கேதிந்த்ர திட்ஸஸி
ஓம் புரித ஹ்யாஸி ஷ்ருதஹ் புருஜ ஷுர்
வ்ருகஹன் ஆநோ பஜஸ்வ ராதாஸி

மேற்கண்ட மந்திரம் இந்தியாவின் ஆன்மீக பொக்கிஷமாக கருதப்படும் நான்கு வேதங்களில் ஒன்றான “ரிக் வேதம்” எனும் நூலில் இருந்து ஆன்மீக பெரியோர்களால், மக்களுக்காக அருளப்பட்ட ஒரு ஆற்றல் மிகுந்த மந்திரமாகும்.

money4

இம்மந்திரத்தை வட இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான வியாபார சமூகத்தை சார்ந்த மக்கள் தினந்தோறும் துதித்து தங்களின் வியாபாரத்தை லாபம் மிக்கதாக மாற்றிக் கொள்கின்றனர்.

நீங்கள் என்ன ஒரு தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, எந்த வகையான வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும், உங்கள் தொழில் வியாபாரங்களை தொடங்குவதற்கு முன்பாக 108 முறை துதித்து வழிபட்டால், உங்களின் தொழில் ரீதியான தொடர்புகளில் வசீகரம் ஏற்பட்டு, அதிக வாடிக்கையாளர்கள் உங்கள் வசம் வர வழி வகுக்கும். தொழில், வியாபார தலங்களில் உங்களுக்கு சக போட்டியாளர்ககளால் எத்தகைய பிரச்சனைகளும் ஏற்படாமல் காக்கும். வியாபாரம் தொடர்பாக நீங்கள் வாங்கிய கடன் விரைவில் அடைக்ககூடிய ஆற்றலை உங்களுக்கு கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.