தோற்று விடுவோமோ என்ற பயம் வரும்போது இந்த 2 மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்! மன தைரியமும், அதன் பின்னால், வெற்றியும் உங்களை தேடி வரும்.

நமக்கு எப்போது அதிகப்படியான மன பயம் வரும்? நாம் எடுக்கக்கூடிய முயற்சியில் தோற்று விடுவோமோ, என்ற சந்தேகம் மனதில் எப்போது எழுகிறதோ, அப்போதே நமக்கு மனதில் பயம் வந்துவிடும். ஆக, தோற்றுவிடுவோமோ என்ற எண்ணம் ஒருவருடைய மனதில் வரவே கூடாது. நிச்சயம் ஜெயம் நமக்கே! என்று நினைத்து எந்த ஒரு காரியத்தையும் தொடங்குங்கள். அது மட்டு மல்லாமல் நமக்கு ஒரு விஷயம் சாதகமாக அமையவில்லை என்றால், நமக்கு அந்த விஷயம் கிடைக்கவில்லை என்றால், அது நம் கையை விட்டு நழுவி சென்று விட்டதே, என்ற கவலை எப்போதும் நம் மனதிற்குள் வைத்துக் கொள்ளவே கூடாது.

கடவுளுக்கு தெரியும். நமக்கு எது நல்லது எது கெட்டது என்று! நீங்கள், உங்களுக்கு நல்லது என்று நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தை  கடவுளிடம் வேண்டிக் கொள்வீர்கள். ஆனால், கடவுள் அந்த வரத்தை உங்களுக்கு தரமாட்டார். காரணம் அந்த நல்லது உங்களுக்கு இன்றைக்கு நல்லதை தந்தாலும், பிற்காலத்தில் கெடுதலை கொடுக்கும் என்ற காரணத்தால் தான். எந்த ஒரு விஷயத்திலும் தோல்வி அடைந்து விட்டால், உடனேயே இறைவனை திட்டும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.

சரி, ஏதோ ஒரு இன்டர்வியூக்கு செல்கிறீர்கள். புதியதாக காண்ட்ராக்ட் ஒப்பந்தம் கையெழுத்தாக முயற்சி எடுக்கிறீர்கள், புதிய தொழில் தொடங்குவீர்கள், முதன் முதலாக புதிய வேலைக்கு செல்கிறார்கள் அல்லது ஏதோ ஒரு சுப காரியத்திற்காக வெளியே செல்கிறீர்கள். உங்களுக்கு அந்த காரியம் வெற்றி அடைய வேண்டும்.  இருக்கக் கூடிய மன பயம் போக வேண்டும் என்ன செய்யலாம்.

 

ஒரே வழி, விக்னங்களை தீர்க்கும் விநாயகரின் பாதங்களைப் பற்றிக் கொள்வது தான். இன்றைக்கு நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்கு செல்வதாக இருந்தால், அன்றைய நாள் அதிகாலை பொழுதிலேயே எழுந்து, குளித்து முடித்து விடவேண்டும். வீட்டில் இருக்கும் பூஜை அறையில் பூக்களால் அலங்காரம் செய்து, தீபம் ஏற்றி வைத்து, விநாயகருக்கு அருகம் புல்லையோ அல்லது எருக்கன் பூவாலான மாலையோ தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அருகம்புல்லை விநாயகருக்கு சமர்ப்பணம் செய்து விட்டு, உங்களுடைய காரியம் வெற்றியாக வேண்டும் என்று, மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன்பின்பு ‘ஓம் விக்னராஜாய நமஹ’ ‘ஓம் காரிய சித்தி விநாயகா நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து விட்டு, அந்த நல்ல காரியத்திற்கு வீட்டிலிருந்து கிளம்புங்கள்.

 

இதோடு மட்டுமல்லாமல், நீங்கள் அந்த வேலைக்கு வெளியே சென்ற பின்பும் கூட, இந்த மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருந்தால், உங்களுக்கு தேவை இல்லாமல் ஏற்படும் மன பயம் நீங்கி, உங்களுக்கே தெரியாத துணிச்சல் உங்களை வந்து சேரும். பிறகென்ன வெற்றி தானாக வரப்போகின்றது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published.