ஸ்ரீ சுப்ரமண்யர் மந்திரம்
ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ
முருக பெருமானின் மற்றொரு பெயரான ஸ்ரீ சுப்ரமணியரின் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை மாதம் தோறும் வரும் “கிருத்திகை” நட்சத்திர தினத்தன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் துதிக்கலாம். கிருத்திகை நட்சத்திர தின மாலை வேளையில் முருகன் கோவிலுக்கு சென்று, முருகனுக்கு அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபித்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். தொழில், வியாபாரங்களில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். துஷ்ட சக்திகள் உங்களை அண்டாது. தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகவும் விரும்பி வணங்கப்படும் கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். சூரபத்மனை அழிப்பதற்கு சிவபெருமானால் தனது நெற்றி கண்ணில் இருந்து ஒளியின் வடிவாக தோற்றுவிக்கப்பட்டு, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றார். முருகப்பெருமானுக்கு சுப்ரமணியர் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப்பெருமான், அக்கார்த்திகை பெண்களை தனது தாயார்களாக கருதி, அவர்களை கவுரவிக்கும் பொருட்டு கிருத்திகை எனப்படும் கார்த்திகை நட்சத்திர தினத்தில் தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளையும் தீர்க்கிறார்.