நன்மைகள் பல அளிக்கும் அம்பாள் துதி

அம்பாள் துதி

 

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி
கருணாம்பிகையே தருணம் இதுவே தயை புரிவாயம்மா
உன் அருள் என்றும் நிலைபெற வேண்டும் நீ வருவாயம்மா
பொன்பொருள் எல்லாம் வழங்கிட வேண்டும் வாழ்த்திடுவாயம்மா
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயம்மா
நின்முகம் கண்டேன் என்முகம் மலராய் மலர்ந்ததும் ஏனம்மா
மங்களம் வழங்கிடும் மகிமையைக் கண்டேன் உன்திருக் கரத்தினிலே

எங்கும் வருவாய் என்னுயிர் நீயே எங்கள் குலதேவி
சங்கடம் தீர்ப்பாய் பாக்களைத் தருவேன் சங்கத் தமிழினிலே
தங்கும் புகழைத்தடையின்றி தருவாய் தயக்கமும் ஏனம்மா
பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே
உயிர்களில் உள்ள உன்னருள் உண்மை உலக மகாசக்தி
சரண்உனை அடைந்தேன் சங்கரிதாயே சக்தி தேவி நீயே
அரண் எனக் காப்பாய் அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே

மூன்று தேவிமார்களையும் அம்பாளாக உருவகித்து இயற்றப்பட்ட துதி இந்த அம்பாள் துதி. இத்துதியை அம்பாளின் வழிபாட்டிற்குரிய செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் காலை அல்லது மாலை வேளையில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று இத்துதியை அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கும் போது மனமொன்றி படிப்பதால் உங்களின் வறிய நிலை மாறும். சிந்தனையில் தெளிவும், சிறந்த செயலாற்றழும் கிட்டும். நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகளை பெறும்.

குழந்தையை காப்பவள் அன்னை அதுபோல் உலகில் வாழும் அனைவரையும் தன் குழந்தையாக கருதுபவள் தான் ஜெகன்மாதாவாக இருக்கும் அன்னை அல்லது அம்பாள் மனிதர்கள் அனைவரையுமே அச்சுறுத்துவது ஏழ்மை எனும் வறிய நிலை ஆகும் இந்த வறிய நிலையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் சொல்லி மாளாதது தனது பக்தர்களின் மீது மிகுந்த கருணை கொண்டவளான அம்பாளின் இந்த துதியை மனமொன்றி படிப்பதால் உடலில் உற்சாகம் ஏற்படும் மனதில் புதிய பலம் ஏற்படும் உங்களின் வறிய நிலையை போக்கும் வழியையும் காட்டுவாள் அம்பாள்.

Leave a Reply

Your email address will not be published.