குரு தட்சிணாமூர்த்தி மந்திரம்:
ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா
மனிதர்களுக்கு எண்ணிலடங்கா பல அறிவாற்றங்கள் உள்ளன. நடக்கப்போவதை முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றானால முன்னறிவு, நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மூலம் பாடம் கற்கும் பின்னறிவு, தொழிலுக்கு உகந்த நுண்ணறிவு இப்படி பல விதமான அறிவுத்திறன் மனிதர்களிடம் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் அனைவரும் வெளிப்படுத்துவது கிடையாது. நமக்குள் இருக்கும் தேஜஸ் மற்றும் அனைத்து விதமான அறிவுத்திறன்கள் வெளிப்பட மேலே உள்ள மந்திரம் அதை முறையாக தினமும் 108 முறை ஜபித்து வர நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்பட துவங்கும். சிவா வடிவமான குரு தட்சிணாமுர்த்தியை மனதில் நிலை நிறுத்தி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும். குரு மூலம் இந்த மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.