நவகிரக விநாயகர் மந்திரம்

வானில் இருக்கும் நவகிரகங்கள் குறித்து ஜோதிட சாஸ்திர படி கணிக்கும் போது அவை நன்மையான பலன்களும், தீமையான பலன்களும் கொடுப்பவையாக இருக்கின்றன. இந்த கிரகங்களில் எந்த ஒரு கிரகமும் ஒருவருக்கு பாதகமான பலன்களை தரக்கூடியதாக இருக்கிறது. நவகிரகங்களின் பாதிப்பால் காரிய தடை, தாமதங்கள் போன்றவை ஏற்படாமிலிருக்கவும், நன்மைகளை பெறவும் துதிக்க வேண்டிய நவகிரக விநாயகர் மந்திரம் இதோ.

vinayagar

நவகிரக விநாயகர் மந்திரம்

நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர
க்ரஹ ஸ்வரூபகம் கணபதயே நம

கணபதி எனும் விநாயக பெருமானை போற்றும் எளிய மந்திரம் இது. இம்மந்திரத்தை தினமும் காலையில் 9 அல்லது 27 முறை கூறி துதிப்பது நல்லது. மாதந்தோறும் வரும் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் 108, 1008 எண்ணிக்கையில் துதிப்பது உத்தமம். காலையில் எழுந்து குளித்து முடித்த பின்பு, விநாயகர் படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி நவகிரகங்களும் விநாயகர் வடிவமாக இருப்பதாக நினைத்து இம்மந்திரத்தை துதிப்பதால் அன்றைய தினத்தில் நீங்கள் ஈடுபடும் காரியங்கள், மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏதும் ஏற்படாது. காரியங்களில் நிச்சய வெற்றி உண்டாகும்.

vinayagar

வினை தீர்ப்பவர் விநாயகர் என்பது ஒரு ஆன்மீக பழமொழி. விலங்கினங்களில் யானை ஞாபக சக்தி, வலிமை, அறிவாற்றல், தைரியம் ஆகிய மேன்மையான குணங்களை கொண்ட ஒரு விலங்காக இருக்கிறது. இந்த யானையின் தலையையும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக விநாயமூர்த்தி இருக்கிறார். எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கு விநாயகரை வழிபட்டு அச்செயலை தொடங்குவது நமது மரபு. எனவே அந்த விநாயகரின் இம்மந்திரத்தை கூறி துதிப்பதால் நமக்கு நன்மைகள் பல ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published.