நீண்ட நாட்களாக தடைபட்டு நிற்கும் காரியம் கூட, உடனே உங்களுக்கு சாதகமாக நடக்கும். தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய விநாயகர் மந்திரம்!

நீண்ட நாட்களாக உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா, நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனை கோர்ட் கேஸ் என்று அலைய விடுகிறதா, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லையா, நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறீர்களா, நீண்ட நாட்களாக உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கிறதா, நீண்ட நாட்களாக வீட்டில் சண்டை சச்சரவு உள்ளதா, நீண்ட நாட்களாக சொந்த தொழிலுக்கான முயற்சியில் வெற்றி காண முடியவில்லையா, நீண்ட நாட்களாக அரசாங்கம் சம்பந்தப்பட்ட கோப்புகளில் கையெழுத்து வாங்க முடியவில்லையா, இப்படி நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் எந்த காரியமாக இருந்தாலும் பரவாயில்லை. அது உடனே நடந்து முடியவேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் இருந்தால் விநாயகரை நினைத்து இந்த வழிபாட்டு முறையை செய்துவிட்டு, அதன் பின்பு தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியத்தை செயலாற்றத் தொடங்குங்கள்.

தடைபட்டுக் கொண்டிருக்கும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்தக் காரியத் தடையைத் தகர்த்தெறியும் சக்தி விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! அந்த விநாயகரை நினைத்து இந்த வழிபாட்டை இந்த முறைப்படி செய்தால் உங்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு.

பலமுறை முயற்சி செய்தும், தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும், குறிப்பிட்ட அந்த காரியத்திற்கு செல்லும் அன்றைக்கு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து குளித்து சுத்தமாகி விடுங்கள். முடிந்தவரை 6 மணிக்கு முன்பாக இந்த வழிபாட்டை தொடங்கி, பூஜையை முடித்து விட வேண்டும். பூஜை அறையில் விநாயகருக்கு அருகம் புல்லை வைத்து, எருக்கன் மாலை சூட்ட வேண்டும். முந்தைய நாளே இந்த இரண்டு பொருட்களையும் தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

 

உங்கள் வீட்டில் எப்பவும் போல ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு வெள்ளைக் காகிதத்தில் நான்கு பக்கத்திலும், நடுவிலும் மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு,  விநாயகரை மனதார நினைத்து ‘இன்றைக்கு நான் செல்லக் கூடிய காரியம் எனக்கு சாதகமாக முடிய வேண்டும். தடையில்லாமல் நடக்க வேண்டும்.’ என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். அதன் பின்பாக ஒரு பேனாவை எடுத்து பின் வரும் மந்திரத்தை 108 முறை எழுதுங்கள்.

 

மந்திரம் எழுதிய அந்த காகிதத்தை மடித்து விநாயகரின் பாதத்தில் வைத்து விட்டு, உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த மந்திரத்தை எழுத தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை 108 முறை உச்சரித்தால் போதும். உங்களுக்கான தடைகளை தகர்த்தெறியும் விநாயகரின் மந்திரம் இதோ!

ஓம் ரீங் அங் உங் கணபதி தேவாய நமோ நமஹ!

 

ஒருவரி மந்திரம்தான். உச்சரிப்பதிலும் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. எழுதுவதிலும் எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. இந்த மந்திரத்தை எழுதி வைத்துவிட்டு, மூன்று முறை தோப்புக்கரணம், மூன்று பிள்ளையார் கொட்டும் வைக்க மறக்காதீங்க. இறுதியாக விநாயகருக்கு தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து விட்டு உங்களது தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியத்தை தொடங்கலாம்.

 

சில பேருக்கு ஒரு முறையிலேயே இந்த பரிகாரம் பலன் அளிக்கும். உங்களது வேண்டுதல் மிகப்பெரிய வேண்டுதலாக இருந்தால், பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தால், வாரம் தோறும் வரும் திங்கட் கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம். (தினம்தோறும் மந்திரங்கள் எழுதிய பேப்பரை, மாலையாகக் கட்டி விநாயகர் கோவிலில் இருக்கும் ஏதாவது ஒரு மரத்தில் மாட்டி விட்டு வந்து விடுங்கள்). முடிந்தவர்கள் உங்களுடைய பிரச்சனை தீர வேண்டும் என்று விநாயகரை வேண்டிக் கொண்டு, தினம்தோறும் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வர வர உங்களது பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிப்பதை நிச்சயம் உங்களால் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.