சிவ பெருமான் ஸ்லோகம்
ஹரி ஓம் நமசிவய ஓம் நமசிவய சுவாஹா
சிவபெருமானுக்குரிய சக்தி வாய்ந்த தாந்தரீக மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருவது உங்களின் உடல்நலத்தை மேம்படுத்தும். பல வகையான ஜுரம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் ஜுரம் நீங்க இந்த மந்திரத்தை உங்களால் எவ்வளவு எண்ணிக்கையில் முடியுமோ, அவ்வளவு எண்ணிக்கையில் உரு ஜெபித்து வந்தால் உங்கள் உடலை பற்றியிருக்கும் எப்படிப்பட்ட ஜுரங்களும் சிவனின் அருளால் நீங்கும். மேலும் உங்களுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஜாதக தோஷங்களையும் இந்த மந்திரத்தை துதிப்பதால் போக்க முடியும். இன்ன பிற நோய்கள் ஏற்படாதவாறு உடல்நலத்தை காக்கும்.
உலகின் முழுமுதற் கடவுள் சிவபெருமான் என்பது நிச்சயம். யோகம் மற்றும் தியானம் போன்ற ஆன்மீகம் சார்ந்த கலைகளுக்கும் முழுமுதல் குருவாக இருப்பவரும் சிவனே ஆவார். தன்னை உண்மையாக வழிபடும் பக்தரின் எத்தகைய குறைகளையும் போக்க கூடியவர் சிவபெருமான். சித்தர்களால் நன்மையான அதிர்வுகள் மிக்க பல மந்திரங்கள் சிவபெருமானுக்காக உண்டாக்கப்பட்டது. அத்தகைய மந்திரங்களில் ஒன்று தான் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை சிவபெருமானை தியானித்து துதித்து வந்தால் பல விதமான நோய்கள் விரைவில் நீங்கும்.